பொங்கலுக்கு இருக்குதாம் மோதல்

அஜீத்தும் விஜய்யும் நண்பர்களாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் பூரிப்படைந்திருப்பது விநியோகஸ்தர்கள்தான். ஏன்? அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு இதை தெரிந்து கொள்வது நல்லது. இருவருக்குமே தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது. விழாக்காலங்களில் இருவரது படமும் ஒரே நேரத்தில் வருவது ஓப்பனிங்கையும் இருவரது படங்களின் மொத்த வசூலையும் பங்கு பிரித்து பாதிக்கிற விஷயமல்லவா?

இருவரும் ஒன்றாகிவிட்டால் போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு ரிலீசை வெவ்வேறு தேதிகளில் வைத்துக் கொள்வார்கள் அல்லவா? இந்த நம்பிக்கை விநியோகஸ்தர்களுக்கு இருந்தாலும், தொழில் போட்டி முக்கியம் என்று கருத ஆரம்பித்துவிட்டார்கள் அஜீத்தும் விஜய்யும். ஜில்லா ஒரு புறம் பரபரப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. வீரம் இன்னொரு பக்கம் அதே வேகத்தில் வளர்கிறது. இரண்டுமே பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என்று விரும்புகிறார்களாம் இரு ஹீரோக்களும்.

2007 ஆம் பொங்கலுக்கு அஜீத்தின் ஆழ்வாரும், விஜய்யின் போக்கிரியும் ரிலீசானது. இதில் ஆழ்வாருக்கு பலத்த சேதம். சுமார் ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழவிருக்கும் மோதலில் நாம ரெண்டு பேருமே ஜெயிக்கணும் என்று விரும்புகிறாராம் அஜீத். இது ஆரோக்கியமான சிந்தனை என்றாலும், வசூல் பாதியாகிடுமே என்று இப்பவே வருந்த ஆரம்பித்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இருந்தாலும் கடைசி நேரத்தில் யாராவது ஒருவர் ஜகா வாங்கிவிடுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது அவர்களுக்கு. பார்க்கலாம்…

Veeram – Jilla releasing on Pongal day will hit distributors

Ajith’s Veeram and Ilayathalapathi’s Jilla are expected to be released on Pongal day. Though both are friends in their personal levels, the professional rivalry will make them competitive much stronger, believe both. Ajith though wishes to get both their films released simultaneously and both should win the race, the distributors’ dilemma is the grand opening and BO collections will get split thus ending up in loss for them. Kollywood sources say that though both the films will hit for Pongal as of now, one of the film may give way for the other, at the last hour. It will be better to look into various aspects of the trade and shedding the ego, before arriving at a decision which should be a win-win situation for all.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பெரிய ஹீரோ படம்னா பெஞ்ச் மேல நிக்க வைச்சாலும் நிப்பாங்க போலிருக்கே!

ஜப்பான் போகிறார் விஜய். கூடவே காஜல் அகர்வாலும். ஜில்லா படத்தின் பாடல் காட்சிக்காக கிளம்பும் இவர்களில் யாருடைய சாய்ஸ் இந்த ஜப்பான்? வேறென்ன... காஜல்தான் ஆசைப்பட்டாராம். இதுவரைக்கும்...

Close