போக விடமாட்டோம்… வெங்கட்பிரபுவுக்கு செக்!

பிரியாணியில் வெறும் ஆணிதான்ப்பா நிறைய இருக்கு என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் மனம் விட்டு குமுறிக் கொண்டிருக்கிறாராம் வெங்கட்பிரபு. வேறொன்றுமில்லை, பத்து மாசம் ஆன பிறகும் வயித்துல சுமக்குற கொடுமை கர்பிணிக்குதானே தெரியும்? பிரயாணியை கிண்டிய கையோடு ரிலீஸ் பண்ணுவார்கள் என்று எதிர்பார்த்தால், அழகுராஜா முந்திக் கொண்டார். இந்த கடுப்பில்தான் போகிற இடத்திலெல்லாம் பிரி- ஆணி என்று வர்ணித்துக் கொண்டிருக்கிறாராம் வெங்கட்பிரபு.

படம் வரும்போது வரட்டும். நாம வேற வேலையை பார்ப்போம் என்று வேறொரு கம்பெனிக்கு கதை சொல்லி அட்வான்சும் வாங்கிவிட்டார் வெங்கட் பிரபு. சிக்கலே இங்குதானாம். பிரியாணியில் வெங்கட்பிரபு கமிட்டாகும்போதே அடுத்த படத்தையும் நானே இயக்குறேன் என்று இதே நிறுவனத்திற்கு கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறாராம் இவர்.

அக்ரிமென்ட் அப்படியே ஈரம் காயாம இருக்கு. நீங்க பாட்டுக்கு போயிட்டீங்கன்னா அந்த அக்ரிமென்ட்ல இருக்கிற ஷரத்து என்னாவது என்று வெங்கட்பிரபுவின் வேகத்திற்கு ஸ்டாப் பட்டனை அமுக்கிவிட்டாராம் பிரியாணி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

ஒரு ஸ்டெப்பு முன்னாடி வச்சா நாலு ஸ்டெப்பு பின்னாடி இழுக்குதே என்று நொந்து கொண்டாலும், நம்ம தெறம மேல தயாரிப்பாளருக்கு இம்புட்டு ஆசையா என்றும் அசந்து போகிறாராம் வெங்கட்பிரபு. இருந்தாலும் புதுக்கம்பெனியை விட்டுவிடவும் மனசில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறாராம். போறேன்னு கிளம்புறவரை புடிச்சு வச்சு ‘பொங்க வைக்கறது’ நல்லாவா இருக்கு?

Venkat Prabhu caught in a fix

Director Venkat Prabhu who finished his Briyani with Karthi is a saddened man these days. Reason? His Briyani was ready to be served long back but he was disappointed that his film has taken the back seat as Karthi’s other film with same producer Gnanavel Raja, has taken the precedence despite his film was started earlier and completed earlier as well. The fix for him now is that he has signed another film with another producer, ignoring Gnanavel Raja of Briyani. Venkat has agreed to a condition that he would do another film for the production company besides Briyani. Now he has violated the contract by signing to another film producer. While he does not want to lose the new producer, he is also confused as to how he can convince Gananvel on this.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மாப்ளே, எனக்கு விட்டுக்கொடுத்துரு… – ஆர்யாவிடம் அலறிய ஜீவா

பெரிசா பிசினஸ் இல்லேன்னாலும் ‘பெரிஸ்ஸ்ஸ்ஸ்சா’ ஆசைப்படுற ஹீரோக்களின் பேராசை மனசுக்கு கோடம்பாக்கத்தில் திரும்பிய இடத்திலெல்லாம் உதாரணம் இருக்கிறது. அப்படி ஒரு உதாரணம்தான் நாம் சொல்லப் போவதும். கோ-...

Close