போச்சம்பள்ளி, டிஷ்யூ கோட்டா, கோட்டா, பனாரஸ்….

சிரிப்பில் நளினம், செயலில் மென்மை, அழகின் உச்சம் என்றால் அது பெண்மை. அப்படிப்பட்ட பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் ஆடைகளும், பூணும் அணிகலன்களும் தான்…

பாரம்பரிய ஆடைகளுக்கு என்று ஒரு கடையும், நவீனரக ஆடைகளுக்கு என்று ஒரு கடையும், புத்தம் புதிய டிசைன்களில் செயற்கை ஆபரணங்கள் வாங்க ஒரு கடையும் என பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்குவது சென்னையில் நாம் வாடிக்கையாக பார்க்கும் ஒன்று. அவ்வாறு கடை கடையாக ஏறினாலும் மனதுக்கு பிடித்தது போன்று உடைகளும், நகைகளும் கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இந்த குறையைப் போக்க ஓர் குடையின் கீழ் ஒட்டுமொத்த அழகின் சங்கமம் என்று சொல்லத்தக்க வகையில் வந்துள்ளது தான் ஸ்ரீ ஸ்ருங்கர். சென்னையின் இதயப்பகுதியான கிழக்கு அண்ணாநகரில் முதலாவது அவென்யூவின் அடையாளமாக மிளிர்ந்து நிற்கிறது ஸ்ரீ ஸ்ருங்கர்.

போச்சம்பள்ளி புடவைகள், டிஷ்யூ கோட்டா, கோட்டா, பனாரஸ் போன்ற பாரம்பரிய உடைகளுக்கு என்று ஒரு தனி பிரிவும், விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்ற வகையில் மசாபா உள்ளிட்ட நவீனரக டிசைனர் ஆடைகளுக்கு என்று மற்றொரு பிரிவும் என பழமை மற்றும் புதுமையின் சங்கமமாக திகழ்கிறது ஸ்ரீ ஸ்ருங்கர்.

ஆடை மட்டும் பெண்மையை அழகாக்கி விடுமா, அதற்கு மெருகு கூட்ட ஆபரணங்கள் வேண்டாமா, இதற்கும் விடை தருகிறது. ஸ்ரீ ஸ்ருங்கர். கைகளை அலங்கரிக்கும் வளையல் உள்ளிட்ட செயற்கை ஆபரணங்கள் முதல், தோளை அலங்கரிக்கும் நவீனரக கைப்பைகள் வரை பெண்களின் ஒட்டுமொத்த தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்கிறது ஸ்ரீ ஸ்ருங்கர்.

கௌரவமிகு வாடிக்கையாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்புமிகு திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்துகிறது ஸ்ரீ ஸ்ருங்கர். ப்ரின்சஸ் க்ளப் என்ற இத்திட்டத்தை செப்டம்பர் 28-ந் தேதி மாலை 7 மணி அளவில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் பிரபலநடிகர் அருண் விஜய் துவக்கி வைத்தார். ப்ரின்சஸ் க்ளப் திட்டத்தில் அப்படி என்ன சிறப்பு என்பதை, ஒருமுறை ஸ்ரீ ஸ்ருங்கர் கடைக்கு நேரில் வருகை தந்து தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ரின்சஸ் க்ளப் திட்ட துவக்க விழாவின் போது சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் முன்னணி மங்கையர்கள் பங்கேற்ற ஆடை அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றது. ஆடை அலங்கார அணிவகுப்பு கலையின் பிரபலங்களில் ஒருவரான கருண் ராமன் இதனை நெறிப்படுத்தினார்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹன்சிகாவை ‘சாச்சுபுட்டாரு’ தமன்னா…

சிம்புவின் ‘கேரம் போர்டு’ விளையாட்டு தெலுங்கு தேசம் வரைக்கும் தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இவரது விரல் வித்தைக்கு ஆளாகியிருக்கிற கேரம் காயான ஹன்சிகாவை ஒரு படத்தில் ரவி...

Close