போனில் அழுதார் சமந்தா…. நஸ்ரியாவை திருப்பி அனுப்பினார் லிங்குசாமி!

எவ்வளவு உயரத்திற்கு போனாலும் சில இழப்புகளை சகித்துக் கொள்ள முடியாது. அப்படி சகித்துக் கொள்ள முடியாத ஒரு தோல்வியிலிருந்து மீண்டிருக்கிறார் சமந்தா. அதுவும் சில பெண்களுக்கேயுரிய கண்ணீர் ஆயுதத்தை கொண்டு.

‘சமந்தாவும் சருமநோயும்’ என்று தனியாக ஒரு ஓய்வு கட்டுரையே எழுதுகிற அளவுக்கு மேற்படி நோயால் தாக்கப்பட்டு முக்கிய படங்களையெல்லாம் நழுவ விட்டிருக்கிறார் சமந்தா. கடந்த வருடத்தில் அவரை தாக்கிய இந்த சரும புயலால் மூன்று மாதங்கள் வெளியே தலைகாட்டாமல் அவர் இருந்ததையும் நாடு அறியும். எல்லாவற்றையும் கடந்து மீண்டும் பழைய வேகத்தில் படங்களை ஒப்புக் கொள்கிற நேரத்தில் பாழாய் போன அந்த பிரச்சனை திரும்ப வர, சூர்யாவும் இவரும் நடிக்கும் படமே தத்தளிப்புக்கு ஆளானது.

கதை பஞ்சாயத்தால் சில காலம் தள்ளிப் போன படப்பிடிப்பை மீண்டும் துவங்கிய லிங்குசாமி, சந்தோஷமாக ஷாட் கட் சொல்லத் தொடங்கிய சில நாட்களிலேயே சமந்தாவும் வந்து இப்படி நின்றால் எப்படியிருக்கும்? என்னடா இது, பட்ட தோலிலேயே படுகிறதே என்று லேசாக ஜர்க் ஆனாராம். இருந்தாலும் சமந்தா இல்லாத வேறு காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார். எந்த காரணத்தை கொண்டும் படப்பிடிப்பை நிறுத்திவிடக் கூடாது என்று கருதியவர், நஸ்ரியாவை அழைத்து ‘சூர்யா படத்தில் நடிக்கிறீங்களா?’ என்று கேட்க, அவரும் உச்சி முடியெல்லாம் ஜில்லாகிப் போகிற சந்தோஷத்தில் பெட்டி படுக்கையோடு சென்னைக்கு கிளம்பிவிட்டார். இந்த செய்தி அதே வேகத்தில் சமந்தாவை சென்றடைய, நேரடியாக லிங்குசாமிக்கே போன் அடித்தாராம்.

இந்த முனையில் போனை எடுத்து காதில் வைத்தால், ஒரு அழுகை சப்தம் மட்டுமே கேட்டதாம். ‘பேசுங்க சமந்தா…’ என்று லிங்குசாமி சிலமுறை கேட்டபின்பு பேச ஆரம்பித்தவர், தயவுசெஞ்சு வேற யாரையும் அந்த கேரக்டர்ல நடிக்க வைக்காதீங்க. அப்படி நடிக்க வச்சீங்கன்னா என்னை இங்கே நிரந்தர பேஷன்ட்டாக்கிடுவாங்க. ப்ளீஸ்… என்று கெஞ்சினாராம். ஏழாம் தேதி படப்பிடிப்புக்கு வந்துவிடுவேன். இது உறுதி என்று கூறிவிட்டு மீண்டும் ஓவென்று அழ… போனை கட் பண்ணிய லிங்குசாமி, நஸ்ரியாவுக்கு போன் அடித்து, அங்கேயே இருங்க. வர வேண்டாம் என்றாராம்.

நஸ்ரியாவின் எண்ணை சட்டியில் படபடவென பொறிந்து கொண்டிருக்கிறார் சமந்தா என்கிற கலர்புல் கடுகு.

Samantha had a great escape from fall-out!

Director Lingusamy who commenced shooting of his film with Arya suddenly faced with a precarious situation. Samanatha the pretty girl, who plays the female lead in the film, suddenly has developed skin rashes or allergy once again. Earlier she lost few important films including the one from director Shankar as she underwent same problems and was taking treatment. Now the problem has cropped up while shooting which made the director Lingusamy upset. She started her treatment at Hyderabad after taking permission from the director informing him that she would resume shooting from 7th onwards. However the director in order not to have any disruption in the shooting schedule contacted Nazriya and asked if she could join the project. Nazriya happily consented and was ready to fly to Mumbai.

On hearing the information Samantha called the director and virtually wept expressing her helplessness, but assured the director that she would be fit to resume the shooting from 7th as promised by her. She reportedly told him if she was removed from the film, she would not only lose her reputation but she will be stamped as a permanent patient. Moved by her request, Lingusamy called back Nazriya to inform that she may stay back as Samantha will continue to be part of the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வந்துட்டாருய்யா வந்துட்டாரு…. வடிவேலுவும் ட்விட்டருக்கு வந்துட்டாரு!

Close