போயஸ்கார்டனில் பொசுங்கல் வாடை! -அண்ணன் தம்பிகள்தான் காரணமாம்…
தன் படங்களால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றால் விநியோகஸ்தர்களை கூப்பிட்டு ‘வச்சுக்கங்க உங்க பணத்தை’ என்று திருப்பித் தருகிற நேர்மை ரஜினிக்கு இருக்கிறது. ஆனால் அவரது மருமகனுக்கு இருக்கிறதா என்கிற கேள்வி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருவதால், ‘அட்றா அவன… புட்றா இவன…’ என்று தனிப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள் அண்ணணும் தம்பியும். இந்த இராம லட்சுமணர்களை சுற்றி என்னவாம் பிரச்சனை?
காதல் கொண்டேன் படத்தை இந்தியில் ரீமேக் பண்ண ஆசைப்பட்டாராம் பிரபல இந்தி தயாரிப்பாளர் போனிகபூர். (அதாங்க… நம்ம மயிலு ஸ்ரீதேவியோட அஸ்பெண்டு)படம் வந்த புதுசில் இதற்காக தனுஷுக்கு ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம். தனுஷ் வாங்குற சென்ட் காசு ஆகுமா இது? இருந்தாலும் இந்த பணத்தை திருப்பி கேட்கவும் இல்லை அவர். ஆனால் தனுஷின் இந்தி மார்க்கெட் பற்றியும் ராஞ்ஜனா பற்றியும் பெருமையாக பேசும்போதெல்லாம், ‘அந்த தம்பிக்கு நான் கூட ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருக்கு’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாராம்.
இவரது பிரச்சனை ஒன்றுமேயில்லை. ஆனால் இவரது அண்ணன் செல்வராகவன், இந்திப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சந்தோஷியிடம் தனது படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் தருவதாக சொல்லி இருபது லட்சம் அட்வான்ஸ் வாங்கினாராம். ஆனால் வேறொருவர் இவரை விட அதிக பணம் கொடுத்தார் என்பதற்காக அவரிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டாராம். வாங்கிய அட்வான்சை திருப்பி தர வேண்டுமல்லவா? பொறுத்து பொறுத்துப் பார்த்த ராஜ்குமார் ‘கில்டு’ யூனியனில் புகார் கொடுத்திருக்கிறார்.
இரண்டாம் உலகம் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வரும் செல்வராகவனின் இரண்டாம் கலகம் இது. சீக்கிரம் சால்வ் பண்ணிக்கோங்க…. போயஸ் கார்டனில் பொசுங்கல் வாடை அடிப்பதையாவது தடுக்கலாம்.