போலீஸ் அதிகாரிகளை அலைகழித்த சோனியா அகர்வால் விவகாரம்! – நள்ளிரவில் பரபரப்பு
நேற்றிரவு முழுக்க பத்திரிகையாளர்களையும் போலீஸ் உயரதிகாரிகள் சிலரையும் உறங்க விடாமல் விரட்டிக் கொண்டேயிருந்தது ஒரு கேள்வி. அந்த நடிகையை கைது செஞ்சுட்டாங்களாமே? உண்மையா என்று கேட்டு துளைத்தெடுத்தார்கள் நிருபர்கள். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இப்படி வரிசையாக பத்திரிகையாளர்கள் போன் செய்து கொண்டேயிருக்க, ஒருவேளை நமக்குதான் ரிப்போர்ட் ஆகவில்லையோ என்னவோ என்று ஏரியா வாரியாக விசாரிக்க ஆரம்பித்தார்கள் உயரதிகாரிகள்.
‘ அப்படியெல்லாம் இல்லைங்க. எல்லாம் புரளி’ என்று அவர்களுக்கு தகவல் கிடைக்கவே நள்ளிரவாகிவிட்டது. ‘சார்… நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல. எந்த நடிகையையும் நாங்க கைது செய்யல’ என்று கூறி புளுகு மூட்டையை பார்சல் கட்டி ஓரமாக எறிந்தார்கள் அதிகாரிகள்.
இவ்வளவு களேபரத்திற்கும் காரணமான அந்த நடிகை சோனியா அகர்வால்! ஐயோ பாவம்…. அவர் எங்கோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்க, அவரை கைது செய்துவிட்டார்கள் என்றொரு புரளியை கிளப்பிவிட்டு பலருடைய உறக்கத்தை கெடுத்தார்கள் படுபாவிகள். தன்னை பற்றி இப்படியொரு பரபரப்பான மேட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே இருந்திருப்பார் அவரும்.
பொழுதுபோகலேன்னா கிளப்பறதுக்கு வேற அக்கப்போரா கிடைக்கல…? அடப்பாவிகளா…
Rumours caused Media and Police on the run!
Rumour mongers had a field day(night?) yesterday spreading rumours about an actress which made the media and police on the toes to find out the authenticity of the news. The rumour was that some actress was arrested. While alert media was doing the basic check on the veracity of the news, there were several calls to media houses enquiring about the news. Police who were contacted by the media did their home work and finally told the media no actress was arrested. The actress in question was Sonia Aggarwal who must have had good night sleep at her home.
என்னது உலகம் சுற்றும் வாலிபன் ரிலிஸ் ஆயிடுச்சா?