போலீஸ் ஸ்டேஷனில் ஒரு காதல் கதை

காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரத்தீஷ்கண்ணா
இசை – வில்லியம்ஸ்
பாடல்கள் – பாரதி, பொன்முத்துவேல்
கலை – பத்து
எடிட்டிங் – நதிபுயல்
நடனம் – தினா
தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ரெட்டி
நிர்வாக தயாரிப்பு – பொன்ராஜ்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – லாரா. இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர்.
இணைதயாரிப்பு – R.Y.ஆல்வின், R.Y.கெவின்
தயாரிப்பு – R.L.யேசுதாஸ்

எழுதி இயக்கும் லாராவிடம் படம் பற்றி கேட்டோம்…..

ஊரைவிட்டு ஓடி வந்த இளம் காதலர்களான மகேந்திரன் – மனிஷாஜித் இருவரும் சென்னை வருகிறார்கள். சந்தேகத்தின் பெயரில் போலீஸ் அவர்களை கைது செய்கிறார்கள். 24 மணி நேரம் காவல் நிலையத்தில் அவர்கள் சந்திக்கும் சுவாரஸ்யம் மற்றும் திகில் ஆகியவற்றை கலந்து முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி வருகிறோம் . இதற்காக சென்னையில் காவல் நிலைய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு படமாக்கப் படுகிறது. மிகக் குறுகிய கால தயாரிப்பாக விந்தை உருவாகிறது என்றார் இயக்குனர் லாரா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kaaviya Thalaivan Movie Stills

Close