போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டுகளுக்கு வட்டி உயர்வு
அந்த வகையில் 2014-15ம் நிதியாண்டுக்கான சில டெபாசிட்டுகளுக்கு வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, ஒரு வருட வைப்பு நிதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 8.2 சதவீத வட்டி, இனி 8.4 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு வைப்பு நிதியும் 8.4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 5 வருட வைப்பு நிதிக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்படும். வருங்கால வைப்பு நிதி (8.7) உள்ளிட்ட பிற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் (4 சதவீதம்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.