ப்ரியா ஆனந்தை உசுப்பேற்றிய இயக்குனர்!

எதிர்நீச்சல்தான் ப்ரியா ஆனந்தின் முதல் ஹிட் படம். அதற்கப்புறம் அவர் தமிழ் சினிமாவின் டிமாண்ட் ஹீரோயின் லிஸ்ட்டுக்குள் வந்துவிட்டார். ஆனாலும் அது வேணும்… இது வேணும் என்று டிமாண்ட் தருகிற ஹீரோயின் அல்ல என்பதுதான் கோடம்பாக்கத்து செய்தி. இதை நன்றாகவே உறுதிப்படுத்தினார் ஆனந்த் ஷங்கர். ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனர். இவர் ஏ.ஆர்.முருகதாசிடம் பல வருடங்களாக பணியாற்றியவர்.

ப்ரியா ஆனந்த் ஒரு ஹீரோயின் போலவே நடந்துக்க மாட்டாங்க. நானே அவங்ககிட்ட சொல்லியிருக்கேன். ஏங்க… நீங்கதான் இந்த படத்தின் ஹீரோயின். கொஞ்சமாவது ஆட்டிட்யூட் காமிங்க. இல்லேன்னா நாங்க எப்படி நம்புறது? கேரவேன் சரியில்லன்னு சண்டை போடுங்க. ஹோட்டல் ரூம் திருப்தியா இல்லேன்னு சொல்லுங்க. எதுவுமே சொல்லாம இருந்தா எப்படின்னு கேட்டுருக்கேன். (இப்படி சொந்த வாயாலே சூனியம் வச்சுக்கறதுக்கு எத்தன பேர் கிளம்பியிருக்கீங்க பிரதர்?)

அதுக்கெல்லாம் சிரிச்சுகிட்டே போயிருவாங்க. சண்டை காட்சிகளை திலிப் சுப்பராயன் பண்ணியிருக்கார். விக்ரம் பிரபுவுக்கு பைட் கம்போஸ் பண்ணினா, ஏன் நான் பைட் பண்ண மாட்டேனா? எனக்கும் ரோப் கட்டுங்கன்னு வந்து நின்னுருவார். படம் முழுக்க அவங்க ஹீரோவோடு வர்றதால சில பைட் காட்சிகளிலும் அவங்க இருக்காங்க என்றார் ஆனந்த் ஷங்கர்.

எத்தனையோ ஹீரோயின்ஸ் இருக்காங்க. ஆனா தமிழ்லேயே பேசுற ஹீரோயின் இவங்கதான்னு சர்டிபிகேட் கொடுத்தார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

Arima Nambi makers praise Priya Anand

Priya Anand is fast making her presence felt in Kollywood. The success of her debut film Edhir Neechal has not gone into her head. She has received praise and appreciation from film makers. But the praise and appreciation the actress has received from the makers are sure to make her much more popular.

Speaking at the press meet of Arima Nambi, the debutant director Anand Shankar, who worked under AR Murugadoss earlier, has said that Priya Anand never behaves herself as a heroine on the sets. She would co-operate even if she is put into inconvenience, and she never complained about anything, even on simple matters, which is an amazing virtue. She has volunteered herself to be inducted in fight scenes too, and since she would appear with hero Vikram Prabhu throughout the film, he had included Priya Anand too in some of the fights, the director Anand Shankar revealed.

Producer Kalipuli Thanu has appreciated Priya’s simplicity and said she converse with team members in Tamil, which makes her special.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மூலக்கொத்தளத்தை மறக்க மாட்டேன்… உலகம் சுற்றும் சிவமணியின் உள்ளூர் பாசம்!

ட்ரம்ஸ் சிவமணி... உலகமே வியக்கக் கூடிய இந்த ட்ரம்ஸ் கலைஞருக்கு நம்ம வட சென்னையிலிருக்கும் மூலக் கொத்தளம்தான் ஆரம்பகால திண்ணை. இந்தி படவுலகம் கூட இவரை ‘வாங்க...

Close