மகன்னும் பார்க்காமல் அவனை ஹீரோயினோடு உருட்டி புரட்டி எடுத்துருக்கார்

சீரியல்களின் ஆதிக்கம் சேனல்களை ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சீரியல்களுக்கே சீதபேதி வரவழைக்கிற அளவுக்கு ஒருகாலத்தில் குடும்ப கதைகளை பிரித்து மேய்ந்தவர் வீ.சேகர். இத்தனைக்கும் இவர் பாரதிராஜாவின் அசிஸ்ட்டென்ட்டாக இருந்தவர். அவரது காதல் நுணுக்கங்கள் இவர் படத்தில் இல்லாவிட்டாலும், இந்த குடும்ப கதைகளை பார்த்து கொண்டாடி மகிழ்ந்தது தமிழ்நாடு. காலப்போக்கில் வீ.சேகர் படங்களுக்கும் விடை கொடுத்தனுப்பினார்கள் ரசிகர்கள்.

காலம் மாறிப்போச்சு என்றாலும், தன்னை புதுப்பித்து புது சொக்கா போட்டுக் கொள்ளாவிட்டால் அவன் என்ன கலைஞன்? சரவணப் பொய்கை என்ற புது சொக்காவுடன் வந்திருக்கிறார் வீ.சேகர். இந்த படத்தில் இவரது மகன் காரல் மார்க்ஸ்தான் ஹீரோ. வெளுத்துக்கட்டு அருந்ததி ஹீரோயின். தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக இருந்த(?) பாரதிராஜா, விக்ரமன், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்கள் வீ.சேகர் வாரிசை வாழ்த்த வந்திருந்தார்கள்.

பூவிலங்கு மோகன் மாதிரியிருக்காரு. கருப்பாயிருந்தாலும் களையா இருக்காரு என்றெல்லாம் காரல் மார்க்ஸ் பற்றி வர்ணித்தார்கள் வந்திருந்தவர்கள். தனது முறை வரும்போது மைக்கை பிடித்த பாரதிராஜா, வழக்கம்போல ஹார்ஸ்ட் ஆஃப் டூ யூ வானார் வார்த்தைக்கு வார்த்தை. அப்படியே அவர் பேசிய உண்மைகள் சினிமாக்காரர்கள் எப்போதாவது பேசுகிற விஷயம். வீ.சேகர் எங்கிட்ட அசிஸ்ட்டென்ட்டா இருந்தார். கடவுள் மறுப்பாளர். நாங்கள்லாம் எங்க வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வந்த மாதிரி, அவரும் கொண்டு வந்திருக்கிறார். என்ன ஒன்று? சொந்த பயிராச்சே என்று நாங்க அதிகமா உரம் போட்டுட்டோம். ஆனால் வீ.சேகர் அந்த விஷயத்துல கரெக்டா இருப்பாருன்னு நினைக்கிறேன். மகன்னும் பார்க்காமல் அவனை ஹீரோயினோடு உருட்டி புரட்டி எடுத்துருக்கார் என்று பாராட்ட, காரல் மார்க்ஸ் கண்கள் சிவக்க வெட்க மார்க்ஸ் ஆனார்.

வீ.சேகர் பேசும்போது என் பிள்ளை கருப்புன்னு சொன்னாரு. ஏன் நீங்களே உங்க புள்ளைய கருப்புன்னு சொல்றீங்க? கருப்பா இருந்தா என்ன? சூப்பர் ஸ்டார் ரஜினி கருப்புதான். இனிமே அப்படி சொல்லாதீங்க என்று செல்லமாக கண்டித்துவிட்டு போனார் ராதாரவி.

Director V Sekar introduces his son in Saravana Poigai

Director V Sekar is popular to family audience having given memorable films with family sentiments. He worked as an associate director to Bharathiraja in his hey days. After a hiatus he is now back with Saravana Poigai in which he introduced his son Karl Marx, as the hero. The launching of the film was held in Chennai today with most of the popular directors including Bharathiraja, Vikraman, P. Vasu, KS Ravikumar and RK Selvamani have participated and wished Sekar and his son.

Speaking on the occasion director Bharathiraja said that Sekar has brought his son to films like many of us. Though Karl Marx is of dark complexion he has charming personality. He hoped, unlike them, Sekar would have been strict with his son despite being the son, especially in love scenes. Actor Radha Ravi advised the speakers not to talk about the complexion.

Director Sekar while thanking the directors for their kind words to Karl Marx chided for saying super star Rajini is also a dark complexioned personality and so is his son too.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜயகாந்த் வாரிசு சண்முகபாண்டியனின் முதல் படமே காமெடிதானாம்….

ஒரு புதிய ஹீரோவின் சகாப்தம் தொடங்குகிறதா, அடங்குகிறதா என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் துவக்கவிழா, தே.மு.தி.க...

Close