‘ மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்… ’ கோவிலுக்குள் உளறிய ஜீவா!

slide

வாத்தியாருக்கே முட்டை போட்ட மாணவர்கள் மாதிரி, பணம் போட்ட தயாரிப்பாளர்களையே பதம் பார்க்கிற ஹீரோக்கள் பெருத்துவிட்டார்கள். அதில் ஒருவர் ஜீவா. இவர் நடித்த ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் சர்ர்ர்ய்யான டாஸ்மாக் சீன் ஒன்று வருகிறதாம். இப்படியெல்லாம் குடிக்கிற சீன் இருந்தா வரிவிலக்கு கிடையாது என்பதில் அரசும், அந்த படங்களுக்கு யூ சர்டிபிகேட் கிடையாது என்பதில் சென்சார் போர்டும் உறுதியாக இருக்கின்றன.

சரி, கிடைக்காட்டி போகட்டும் என்று இயக்குனரும் நடிகரும் இருந்துவிடலாம். ஆனால் தயாரிப்பாளரால் அப்படியிருக்க முடியுமா? கலெக்ஷனில் முப்பது சதவீதம் முழுசா போயிருமே என்று கவலைப்பட வேண்டியது அவரும் அடகு வைக்கப்பட்ட அவரது தோப்பு துரவுகளும்தானே? இந்த டாஸ்மாக் காட்சியை பற்றி சந்தோஷமாக வர்ணித்துக் கொண்டிருந்த ஜீவாவிடம் அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், ஏன் சார். நீங்களாவது சொல்லி அந்த குடிக்கிற காட்சியை தவிர்த்திருக்கலாமே? என்று கேட்க, அதற்கு ஜீவா சொன்ன பதில்தான் ‘விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம்’ கட்டிய விளக்கம்.

இன்றைக்கு மூன்று நண்பர்கள் சந்திச்சா உட்கார்ந்து பேசுற இடம் டாஸ்மாக்குதான். நாங்க யதார்த்தம் என்னவோ அதைதானே சொல்லியிருக்கோம். நான் சமீபத்துல கோவிலுக்கு சாமி கும்பிட போயிருந்தேன். நானும் எவ்வளவோ படத்துல நடிச்சுருக்கேன். ஆனால் அங்கு என்னை சூழ்ந்துகிட்ட பக்தர்கள், ஸார்… மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன் டயலாக்கை சொல்ல சொன்னாங்க. வேற வழியில்லாமல் நானும் கோவில்னு பார்க்காம சொல்ல வேண்டியதாப் போச்சு. அந்தளவுக்கு இந்த டாஸ்மாக் கோவிலுக்குள்ளேயும் வந்துருச்சு என்று கூற, நிருபருக்கு பலத்த அதிர்ச்சி.

ஜீவா சேட், நீங்க உங்களோட ஜெயின் கோவிலுக்கு போய் அப்படியெல்லாம் சொல்லுவீங்களா என்று தொண்டை வரைக்கும் வந்த கேள்வியை அங்கேயே முழுங்கிவிட்டு நடையை கட்டினாராம். எல்லாம் நாகரீகம் தந்த நல்ல பளக்க வளக்கம்!

Jiva justifies bar-scene in Endrendum Punnagai

Presenting the reality as it is in Cinema is one thing and presenting it with a masked scene is another. It is here the veteran directors stand tall. The state government and the Censor Board are serious about showing the ‘drinking liquor’ scenes in films by making it clear that there will no tax waiver or U certification respectively for such films. But despite of this young directors continue to depict such scenes in the films.

Recently Jiva was asked by reporters should he not prevail upon the director to avoid such scene in his upcoming film Endrendum Punnagai. He has not only failed to regret such scenes but justifies such scenes in the film. He said during one of his visits to a temple, people have surrounded him and asked him to utter the dialogue “Machchi Oru quarter sollen” (Buddy say one more quarter). He uttered this inside the temple at the requests of the fans. He further added TASMAC has entered the temple premises too.

What a shame Jiva? Justifying action for handful of people is not justification.

1 Comment
  1. Anantharaman says

    அந்தணன் சார்…..இதை பாத்துட்டு ஜீவா என்ன அந்த காட்சியை கட் செய்திடுவாரா என்ன ?…அவரே காசுக்கு நடிக்கறார் சமுக அக்கறையோட இருக்கணும் சார்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதவி இயக்குனர் கன்னத்தில் பளார்…. படப்பிடிப்பில் கோபப்பட்ட தனுஷ்!

‘கோபக் குறைப்பு பானம்’ ஏதாவது இருந்தால் தினம் ஒரு லிட்டர் வீதம் கலக்கிக் கொடுக்கலாம் தனுஷுக்கு. அவ்வளவு எரிச்சல் படுகிறாராம் அண்மைக்காலமாக. இந்த அவஸ்தையை அதிகம் அனுபவிப்பது...

Close