மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு ஒத்திவைப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் (மே) 4 ஆகிய தேதிகளில் ‘பட்டதாரி நிலையினருக்கான தேர்வு-2014’ நடைபெறும் என அறிவித்திருந்தது.இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நாடு முழுவதும் தற்போது தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் நடைபெறுவதால், 2014-ம் ஆண்டுக்கான பட்டதாரி நிலையினருக்கான தேர்வு, இந்த ஆண்டின் இரண்டாவது பாதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புதிய எந்திரத்தில் துண்டுச்சீட்டு: வாக்களித்ததை தவறாக காட்டினால் புகார் செய்யலாம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த புதிய கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது அந்த கருவியில் அச்சாகி...

Close