மந்திரவாதி பிடியில் சமந்தா? சரும நோய் விலக ஒரு ஷார்ட் கட்!

சென்ட்டிமென்டுகளால் வடிவமைக்கப்பட்டதுதான் சினிமாவும். பூனையை குறுக்கே விட்ட மன்சூரலிகானை தவிர, மீதி எல்லாருமே பூசணிக்காயும், பொட்டு சூடமும் இல்லாமல் படத்தை துவங்குவதும் இல்லை. முடிப்பதும் இல்லை. இப்படிப்பட்ட சென்ட்டிமென்ட் உலகத்தில் மந்திரவாதிகளுக்கும் பஞ்சமில்லை. அப்படியொரு மந்திரவாதி சமந்தாவின் சரும நோயை போக்குகிறேன் என்று சொல்லியே படம் காட்டிக் கொண்டிருக்கிறார் இங்கே.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆந்திராவையே அலற விட்டார் சமந்தா. முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்து வந்த அத்தனை படங்களும் திடீர் ஸ்டாப் ஆனது. காரணம் சமந்தாவை பிடித்தாட்டிய சருமநோய். அவர் மீண்டும் எப்போது படப்பிடிப்புக்கு வருவார் என்பதையே அறிந்து கொள்ள முடியாமல் அல்லாடியது ஆந்திரா பிலிம் இன்டஸ்ட்ரி. அவர் நடித்த எல்லா படங்களும் பாதி கிணற்றை தாண்டிய நிலையில் இருந்ததால்தான் இந்த படபடப்பு. அந்த நேரத்தில்தான் மருத்துவர்களை நம்பாமல் மந்திரவாதியை நம்பியது அந்த ஊர். கோடிக்கணக்கில் பணம் முடங்கிக் கிடக்கிறது. எதை தின்றால் பித்தம் தெளியும் மனநிலைதான் அதற்கெல்லாம் காரணம்.

வினித் பட் என்ற புகழ்பெற்ற மந்திரவாதியை அழைத்தவர்கள், சமந்தாவை பில்லி சூனியம் பேய் பிடித்திருந்தால் விரட்டுமாறு கேட்டுக் கொண்டார்களாம். அவரும் சில பெரிய சினிமா கம்பெனிகளுக்கு நேரடியாக விசிட் அடித்து, பிரமாதமான பூஜைகளை நடத்தினாராம். ஒருபக்கம் பூஜைகள் தொடர தொடர… சமந்தாவுக்கு சரும நோய் சரியாகவே ஆகாது என்று பீடித்திருந்த அச்சம் மெல்ல மெல்ல பிடி விலகியதாம். இவ்வளவு தகவலும் இப்போது ஆந்திராவிலிருந்து கசிய ஆரம்பித்திருக்கிறது.

தற்போது அதே போலொரு நிலைமையில் சிக்கியிருந்த சமந்தா மீண்டும் வினித் பட் உதவியுடன்தான் குணமாகி வருவதாகவும் கதைக்கிறார்கள். எப்படியோ… விஷம் தலைக்கேறாமல் விரலோடு ஒழிஞ்சா சரி!

Is Samantha taking the help of tantric for cure?

It is a well known fact that Samantha is suffering with her skin allergy and has not allowed her to conquer the filmdom. Though she has been called as lucky mascot in Andhra, film makers are worried about Samantha’s continued non availability for shoots due to her skin problems. Now it is learnt from Andhra, these film makers have sought the help of a tantric Vinith Bhat to get the remedy from their problems. Bhat had performed some religious rites, after which Samantha seems to have recovered a bit. It is further learnt that she is now seeking the help from Vineet Bhat to get herself cured completely.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி பர்த்டேவுக்கு நான் எதுக்கு வாழ்த்து சொல்லணும்? – நடிகை சுஹாசினி ஆவேசம்

ரஜினி பிறந்த நாள் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சேனல்களுக்கும் கொண்டாட்டமான நாள். தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு ராஜபாட்டையை உருவாக்கிக் கொண்ட ரஜினிக்கு இந்த மரியாதையை கூட கொடுக்கவில்லையென்றால்...

Close