மயக்கம் வந்தால் தெளிய வைக்க ‘ கோலி சோடா ’ தயார்…!

பொய்யா சிரிச்சு, போலியா பதில் சொல்லி… இப்படியான வழக்கத்திலிருந்து விடுபட்டிருந்தது ‘கோலிசோடா ’ படத்தின் பிரஸ்மீட். அதிலும் படத்தில் நடிக்க வேண்டிய ஒரு பெண்ணை தேடி படத்தின் டைரக்டர் விஜய் மில்டன் நடத்திய நெடும்பயணம் பற்றி அவர் சொல்ல சொல்ல, ஒரு ஹாஸ்ய நாவலின் சுவாரஸ்யமும், ஒரு திகில் நாவலின் படபடப்பும் ஏற்பட்டது. (அதுபற்றி தனி செய்தி பிறகு)

பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்குனராக அடுத்த கட்டத்தை தொட்டிருக்கும் படம் இது. இதற்கு முன்பே இந்த கட்டத்தை தொட்டுவிட அவர் முயற்சித்ததை பற்றி இப்போது சொல்ல வேண்டாம். (இந்த நல்ல நேரத்தில் எதற்கு நல்ல பாம்பை நினைப்பானேன்?) ஒவ்வொருத்தருக்கும் ஒரு அடையாளம் வேணும். எப்போ அடையாளம் வேணும்னு மனசு நினைக்குதோ, அப்பவுலேர்ந்து ஒரு ஓட்டம் ஆரம்பிக்கும். அதைதான் இந்த படத்தில் சொல்லியிருக்கேன். ரொம்ப சின்ன பசங்களும் கிடையாது. பெரிய பசங்களும் கிடையாது. அவங்களை வச்சுகிட்டு லவ் சாங் பாட முடியாது. மிரட்டலா பைட் பண்ண முடியாது. ஒரு பார்ல சாங் வைக்க முடியாது. அதுக்காக குழந்தைகள் கதையும் சொல்ல முடியாது. இது எல்லாத்தையும் தவிர்த்துட்டு ஒரு கதையை யோசிச்சேன். அதுதான் இந்த கோலிசோடா.

பொதுவாகவே கோலி சோடாவுக்குள்ளே இருக்கிற திரவம் தண்ணி மாதிரி சாதாரணமா இருக்கும். கொஞ்சம் பிரஷர் கொடுத்தா பாட்டிலையே உடைச்சுரும். இந்த கதை அப்படியொரு கருத்தை மையமா கொண்டதுதான். தினமும் நாலு லட்சம் பேர் வந்து போற கோயம்பேடு மார்க்கெட்டில் நாலு கேமிராவை ஒளிச்சு வச்சு முழு படத்தையும் எடுத்திருக்கோம். அங்கு நடமாடிய யாருக்குமே நாங்க படம் எடுத்துட்டு இருக்கோம்னு தெரியாது. அவ்வளவு ஏன்? படத்தோட பைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தினமும் ஷுட்டிங்குக்கு லுங்கியோட வந்துருவார்னா பாருங்க.

படத்தில் நடிக்கிற எல்லா பசங்களும் ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கிறவங்க. அதனால் சனி ஞாயிறு லீவு நாட்களில் ஷுட்டிங் வைப்போம். அன்னைக்கு நைட்டே அப்படியே ஷுட்டிங் முடிச்சுட்டு கோயம்பேடுல பஸ் ஏறிடுவாங்க. ஒரு பையனுக்கு திருச்சி சொந்த ஊர். இன்னொருத்தனுக்கு புதுக்கோட்டை என்று தனது ஷுட்டிங் அனுபவத்தை கதை போல விவரித்தார் விஜய் மில்டன்.

இந்த படத்தை சின்ன பட்ஜெட்ல எடுத்துருக்கேன்னு சொல்றாங்க. அது தப்பு. ரொம்ப ரொம்ப ரொம்ப சின்ன பட்ஜெட்ல எடுத்துருக்கேன்ங்கிறதுதான் சரி. படத்தில் யாருக்கும் சம்பளம் இல்லே. கேரவேன் இல்ல. ஸ்கிரினுக்கு வெளியே பெரிய செலவு எதுவும் இல்ல. அதனால்தான் என்னால தைரியமா இப்படி சொல்ல முடியுது என்று இன்டஸ்ட்ரிக்கே அதிர்ச்சியை கொடுத்தவர், இப்போது படத்தை நல்ல லாபத்திற்கு விற்ற பிறகு சும்மாயிருப்பாரா? எல்லாருக்கும் நிறைவாக ஒரு தொகையை கொடுத்தாராம். படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் எல்லாருக்கும் தங்க சங்கிலி அணிவித்து மகிழ்ந்தார்.

அப்படியே விஜய் மில்டன் செய்த இன்னொரு காரியம், தனது திரையுலக நண்பர்களான ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, திருமலை ரமணா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இயக்குனர்களை தனித்தனியாக வரவழைத்து படம் போட்டு காண்பித்ததுதான். அவர்கள் சொன்ன சின்ன சின்ன திருத்தங்களை கூட அலசி ஆராய்ந்து சரியென்றால் ஏற்றுக் கொண்டு இந்த படத்தை முழுமையாக்கியிருக்கிறார்.

கோலி சோடாவுக்காக தயாரிக்கப்பட்ட குட்டி குட்டி ட்ரெய்லர்கள் நான்கையும் பார்ப்பவர்கள், ரெண்டு நாளைக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து ரிலீசுக்காக தவம் கிடப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். கடைசி நேரத்தில் தியேட்டருக்கு போகிறவர்களுக்கு கூட்ட நெரிசலில் மயக்கம் ஏற்பட்டால் முகத்திலடித்து எழுப்புவதற்கு ‘கோலி சோடா ’ தேவைப்பட்டாலும் ஆச்சர்யமில்லை நண்பர்களே…

Director Vijay Milton meets the press for Goli Soda

Cinematographer Vijay Milton’s long awaited dream has been realised having debuted as director in Goli Soda. He met the press on 16th Jan. and narrated his experience of making Goli Soda.

At the outset he elaborated how he was searching for a girl for casting in the film which was a lively sequence of incidents by itself.  He then went on to say, “I was planning for film which has no hero or heroine, no bar scenes, no fight scenes, no preaching story nor childrens’ film. Finally I ended up doing a film with 4 boys who are not too young or of adolescent age. Their life story is Goli Soda”, said Vijay Milton.

“Goli Soda contains water with gas, when applied pressure will burst out the bottle itself. The film also has such a basic theme. We shot the film entirely at Koyambedu market without any one aware that we are indeed shooting a film. The four boys who study at schools will come for shoots on Saturday and Sundays and after completion of the shoot board the last bus to their home town. One boy was from Trichy and another from Pudhukottai”, revealed the director.

Vijay Milton also said that everyone who are part of the film have done without any remuneration, which was only given after the film was sold for theatrical distribution rights, from which he had paid every one the salary. Thus he could contain the expenditure of the film, said the director with pride.

He also invited some of his director friends including AR Murugadoss, Lingusamy, Balaji Sakthivel and Thirumalai Ramana and showed them the film. Their small opinions have been incorporated into the film, said the director. He also showcased trailer of the film to the press who gave thumbs up for the film already.

1 Comment
  1. Suriyanarayanan says

    Excellent Milton keep it up. Most of the industry people don’t know how to select subject which reduce the budget minimal. Now these people will start thinking.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நன்றி மறவாத நடிகர் திலகத்தின் குடும்பம்….

நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பின் படமான பராசக்தி மூலம் சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் பெருமாள் முதலியார். வேலூர் நேஷனல் திரையரங்கின் உரிமையாளரான இவரது வீட்டுக்கு...

Close