மயிலு மகளை வளைங்கப்பா… இது கேப்டன் மகனுக்கு கிளி தேடும் படலம்!

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கோடம்பாக்கத்தில் அலசோ அலசென அலசி கடைசியில் ஒரு டைரக்டரை கண்டுபிடித்து அவர் கையில் நம்பிக்கையோடு மகனை ஒப்படைத்துவிட்டார் விஜயகாந்த். ‘சின்ன கேப்டன் வாழ்க’ என்றெல்லாம் முதல் நாளே கோஷம் போட்டது கூட்டம். இந்த கோஷம் நிரந்தரமாக வேண்டும் என்றால், இந்த சினிமா ஜெயித்தே ஆக வேண்டும். விஜயகாந்த் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், இந்த படம் 100 நாள், 200 நாளெல்லாம் ஓட வேண்டாம். அஞ்சு வாரம்… ஆறு வாரம் ஓடுனா போதுமாம். (அஜீத் விஜய் படங்களுக்கே அதுதான்ங்க ஆயுள்)

கதை ஜெயிக்கும் என்று நம்பியது முதல் படி என்றால், தியேட்டருக்குள் ஆட்களை இழுக்க வேண்டுமே? அதற்கு கட்சிக்காரர்கள் ஹெல்ப் பண்ணினாலும் நிஜமான கூட்டம் உள்ளே வரணும்னா ஒரு ‘கியூராசிட்டிய’ கிளப்பிவிடணும் என்று அவருக்கு அட்வைஸ் செய்தார்களாம் அவரது நண்பர்கள். ‘அது என்னாய்யா ?’ என்று கேட்டவருக்கு பளிச்சென புரியும்படி சொல்லப்பட்டது இதுதான். தம்பிக்கு சோடியா பெரிய ஹீரோயின போடுங்க. இல்லேன்னா பெரிய ஹீரோயினா இருந்தவங்க பொண்ணையாவது போடுங்க… என்று.

நாலாபுறமும் வலையை வீசிய படக்குழுவினர், அந்தகால அழகுமயில் ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வியை கேட்கலாமே என்று ஐடியா கொடுத்தார்களாம். அப்புறமென்ன? ஸ்ரீதேவி புருஷர் போனி கபூருக்கே போன் போட்டுவிட்டார்களாம். கிளிய வளர்த்து கிங்காங் கையில கொடுக்கறதா என்றெல்லாம் கலங்கவில்லை அவர். ஒரு கோடி இருந்தா மேற்கொண்டு பேசலாம் என்றாராம். அம்மா மாதிரி அழகாயிருந்தாலும் பரவாயில்ல. இம்மாம் பெரிய தொகை கேட்கிறாங்களே… என்று அதிர்ச்சியாகியிருக்கிறார்கள் இங்கே.

வேணாம்னு சொல்றதைதான் வேற மாதிரி சொல்லிட்டாரோ?

Sri Devi’s daughter likely to play the lead with Shanmugha Pandian

There is news that Sridevi’s daughter Jhanvi will be the likely pair for Shanmugha Pandian, Vijayakanth’s son, who himself is debuting in the film Sagaptham. Vijayakanth who spoke on this occasion mentioned that there will be two heroines for Shanmuga Pandian in Sagaptham but he did not mention their names. It is learnt to make his son a hit in Kollywood, he was advised to rope in an established heroine or a new face with noticeable curiosity. So Sri Devi’s daughter fit the bill and talks started to make Jhanvi to play the lead. When quizzed about the development, sources from the film unit said that the talks are going on but nothing has been finalised yet. Perhaps the salary demanded seems to be on a higher side.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
படத்தப்பற்றி சொல்லுங்கன்னா….? தலை சுற்ற வைக்கிறார் விதார்த்!

படத்தப்பத்தி சொல்லுங்கன்னு கேட்டா அருத்தாபத்தின்னுதான் ஆரம்பிக்கிறார் விதார்த். என்னடா இது என்று தலை கிர்ரடிக்க கவனித்தால் நிஜமாகவே ஆச்சர்யம்தான். கொஞ்ச காலமாகவே கோடம்பாக்கத்தில் எந்த குழாயை திறந்தாலும்...

Close