மருத்துவமனையிலிருந்து விழா மேடைக்கு… – ஒரு டைரக்டரின் போராட்டம்!

மகள்களை பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும்… முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று. தன் படத்தின் வெற்றியை விட இந்த டயலாக்கை மக்கள் மனதில் ஒட்ட வைத்தவர் டைரக்டர் ராம். ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தை தனது தங்க மீன்கள் படத்தில் இவர் சொல்லி முடித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒரு சித்தப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்ல வருகிறது இன்னொரு படம். அதுதான் ‘ஒரு ஊர்ல…’

ஒரு சின்ன வித்தியாசம் மட்டுமல்ல, பெரிய வித்தியாசம் இப்படத்திற்கும் தங்கமீன்களுக்கும். இந்த படத்தை முழுவதும் எடுத்து முடித்த பின்புதான் இசைஞானி இளையராஜாவிடம் போனாராம் டைரக்டர் வசந்தகுமார். அதை திரையிட்டு பார்த்துவிட்டு நான் உன் படத்துக்கு இசையமைச்சு தர்றேன் என்று கூறி ஒரு ஊர்ல படத்தை ஒரு இசை ராஜாங்கமாகவே முடித்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

பொல்லாதவன், பருத்தி வீரன் ஆகிய படங்களில் சிற்சில வேடங்களில் நடித்திருக்கும் வெங்கடேஷ்தான் இப்படத்தின் ஹீரோ. படத்தின் இயக்குனர் வசந்தகுமார் தமிழ்சினிமாவில் பழம் தின்று அதன் தோலையும் தின்றவர். அந்தளவுக்கு அனுபவசாலியான இவரை காலம் இத்தனை காலம் வெயிட்டிங் லிஸ்ட்டில்தான் வைத்திருந்தது. இருந்தாலும் அவரை வாழ்த்த பிரபல இயக்குனர்கள் வெற்றிமாறன், பிரபுசாலமன் ஆகியோர் வந்திருந்தார்கள். ‘இளையராஜா என்ற கோவிலின் கருவறை வரைக்கும் சென்றுவிட்டாயே நண்பா ’ என்று பாராட்டினார் பிரபல கதை வசனகர்த்தாவும் டைரக்டருமான ரத்னகுமார்.

ஒரு ஆச்சர்யம். வசந்தகுமாருக்கு கடந்த சில வாரங்களாக கடுமையான உடல்நலக் குறைவு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் இப்படத்தின் பாடல் டீசர் வெளியீட்டு விழாவுக்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்திருந்தார். விழா முடிந்ததும் மீண்டும் அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கண்டிஷன். இந்த படத்தின் வெற்றிதான் அவருக்கு நிரந்தர உற்சாகத்தை கொடுக்கும் போலிருக்கிறது.

படத்தின் சில காட்சிகள் அற்புதமாக இருப்பதால் இனி அவருக்கு மருந்து மாத்திரைகள் தேவைப்படாது. ஏனென்றால் வெற்றியை விட சிறந்த டானிக் வேறு எதுவாக இருக்க முடியும்?

 

 

Director Vasanthkumar’s ‘Oru oorlae’ teaser released

Vasanthkumar is a veteran in Tamil Cinema, but time delayed his recognition. He has now come out with a film titled ‘Oru oorlae’ depicting the ‘love’ between paternal uncle (sithappa in Tamil) and his daughter (his brother’s daughter). After Ram’s Thanga Meenkal, this film will show case the love between parent and child.

Vasanthkumar after completing the entire shooting went to Isaignani to request him to make music score. On seeing the whole film, the veteran music composer immediately fallen in love with the film, and not only told the director that he would score the music for the film, but given the film such a music score that would haunt the audience a long time. Vasanthkumar did not have words to thank the composer for his extraordinary gesture.

Praising the director during the ‘teaser’ release event of the film, held recently, Rathnakumar, another veteran script writer and director, said that it is indeed a great achievement to have gotten into the sanctum of the temple called Ilayaraja.

Vasanthakumar was ill for some time, but he got himself discharged after medication to be present for the teaser release event. Hopefully, the success of his film, would do a world of good to recover from his ill to a delightful career.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிட்டு படத்தில் அமலாபால்….?

பிட்டு படத்தில் அமலாபால்....? இந்த தலைப்பு அவரது கோடானு கோடி ரசிகர்களின் கண்களில் ஒரு மெர்க்குரி பல்பை எரியவிட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எங்கே எங்கே என்று...

Close