மலேசியாவில் ஜீவன் –  வித்யா  பாடல் காட்சி  

        

பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் “அதிபர்”. இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் cbi அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதன் முறையாக நடிக்கும் டி.சிவகுமாரின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பும் மற்றவர்களால் பாராட்டப் படும்.  மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –       பிலிப்ஸ் விஜயகுமார் /    இசை       –       விக்ரம்செல்வா

பாடல்கள்      –       நா.முத்துக்குமார், விவேகா  /     கலை        –       M.G.சேகர்

நடனம்           –       சிவசங்கர், தினேஷ் /   ஸ்டன்ட்          –       கனல்கண்ணன்

எடிட்டிங்        –       சஷிகுமார்,  தயாரிப்பு நிர்வாகம்  –  அஷ்ரப் – ஹக்கீம்

இணைதயாரிப்பு   –    P.B. சரவணன்

தயாரிப்பு   –    T.சிவகுமார்.

எழுதி இயக்குபவர் சூர்யபிரகாஷ்.

படம் பற்றி இயக்குனர் சூர்யபிரகாஷிடம் கேட்டோம். படத்தின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தயாரிப்பாளர் படத்தின் கதைக்கேற்ப செலவு செய்கிறார்.

சமீபத்தில் மலேசியாவில் ஜீவன்  –  வித்யா பங்கேற்ற

“ என் காதல் தேவதை

எங்கே தான் இருக்கிறாள்

தேடி நான் வருகிறேன் என் காதல் சொல்ல “ என்ற பாடலும்

“ அவளா இவளா

அவளேதான் இவளா

கனவில் வந்த தேவதை தானா

கண்கள் கண்ட தாரகை தானா ?

என்ற பாடலும் தினேஷ் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. அத்துடன் ஜீவனுடன் மலேசிய ஸ்டன்ட்  கலைஞர்கள் மோதும் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. எல்லா வேலைகளும் முடிவடைந்தது. படம் விரைவில் திரைக்கு வருகிறது என்றார் இயக்குனர் சூர்யபிரகாஷ்

Read previous post:
ஹன்சிகாவா? நித்யாமேனனா? யார் அழகு? ஆடியோ விழாவில் ஆவேசப்பட்ட நடிகை!

நடிகை ஜெயப்ரதா தயாரித்து அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் ‘உயிரே உயிரே’. இதை ‘சத்யம்’ பட இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல்...

Close