டூர் அடித்த அனிருத் ஆன்ட்ரியா…! -யாரு சொன்னது லவ் இல்லேன்னு?
முள்ளங்கியோடு முருங்கைக்காய் சம்பந்தம் வைத்துக் கொண்டது போல பொருந்தா காதலாகதான் இருக்கிறது அனிருத் ஆன்ட்ரியா காதல். வயசால் வேறுபட்டிருந்தாலும் மனசால் மையல் கொண்டிருக்கிறார்கள் இருவரும். நாங்க ஒண்ணா இல்ல. எல்லாம் மீடியாவோட கட்டுக்கதை என்றெல்லாம் இவர்கள் அளந்து கொண்டிருந்தாலும் நிஜம் வேறு என்கிறார்கள் இவர்கள் இருவரையும் கண்கொத்தி பாம்பாக கவனித்து வரும் சிலர்.
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஐஎம்எஸ் என்கிற மாபெரும் கலைநிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றார்களாம் அனிருத்தும் ஆன்ட்ரியாவும். விமானத்தில் வந்திறங்கிய நேரத்திலிருந்து ஷாப்பிங், சைட் சீயிங் போன்ற இன்னபிற அலைச்சல்களின் போதும் ஒருவர் கையை மற்றவர் விடவில்லை என்று வர்ணிக்கிறார்கள் மலேசிய தமிழர்கள் சிலர்.
செட் தோசையை பிரிச்ச பாவம் நமக்கு வேணாம்… சுத்துங்க ஜோடிகளா, சுத்துங்க!
(மேலே உள்ள படம் மலேசியாவில் இருவரும் ஒன்றாக சுற்றியபோது எடுக்கப்பட்டதுதான்)