மலேசியாவில் திட்டமிட்டபடி இசைநிகழ்ச்சி… வீடியோ கான்பிரன்சிங்கில் பேசுகிறார் ராஜா!
இளையராஜாவுக்கு மாற்று ரத்தக்குழாய் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவிலேயே இருப்பதாகவும் இன்று பிரபல நாளேட்டில் செய்தி வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து பதற்றத்தில் இருக்கிறார்கள். ஆனால் இளையராஜா தரப்பிலிருந்து வரும் தகவல்களை கேட்டால் அது அப்படியே வேறு மாதிரியாக இருக்கிறது. அவர் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள் அவர்கள்.
இதற்கிடையில் மலேசியாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்குமா?
நிச்சயம் நடக்கும் என்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்ள மாட்டாராம். மாறாக இன்னொரு யுக்தி கையாளப்படுமாம். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே சென்னையிலிருந்து அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ரசிகர்களிடம் பேசுவாராம். இதை அகன்ற திரையில் ஒளிபரப்பும் வேலைகளும் துரிதமாக முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இன்னும் சில வாரங்களுக்கு பிறகு மலேசியா சென்று தனது ரசிகர்களை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் இளையராஜா.
திட்டமிட்டபடி 27 ந் தேதி இங்கிருந்து கார்த்திக்ராஜாவும் இசைக்கலைஞர்களும் கிளம்புவதாக இளையராஜா தரப்பு தெரிவிக்கிறது.
Malaysian live music concert will go ahead
Ilayaraja who is convalescing in the special, contrary to the news report that came today, and his condition is stable and improving, according to sources close to the music composer’s family.
The sources have also confirmed that the live music concert will go ahead as planned in Malaysia but Ilayaraja may not be present physically, but will converse through video conferencing. The work for the same has already started. They also add that Ilayaraja would visit Malaysia once his condition is improved. As planned earlier Karthik Raja and musicians would leave for Malaysia on 27th Dec.