மலேசிய விமானத்தின் பாகங்கள் காணப்படுவதாக ஆஸ்திரேலியா மீண்டும் உறுதி

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இரு தினங்களுக்கு முன் 24 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் நீளமுள்ள விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கோள் அனுப்பிய படங்களில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.ஆஸ்திரேலிய மற்றும் இந்திய நாட்டின் விமானங்கள் தேடும் பணியில் ஈடுபட்டுவந்தன. தற்போது விமானம் குறித்து மேலும் ஒரு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. மரத்தாலான மெத்தை போன்ற பொருன் ஒன்றும், பெல்ட்களும் விமானத்தை தேடும் பகுதிகளில் இன்று கண்டதாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை போலவே பிரான்ஸ் நாடும் இந்திய பெருங்கடலில் விமான பாகங்கள் போன்ற பொருட்கள் மிதக்கும் செயற்கைகோள் புகைப்படத்தை மலேசியாவிற்கு அனுப்பிள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை மலேசிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். வெகு விரைவில் விமானம் குறித்த தவகல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
போலி வலி பேர்வழிகளை காட்டிக் கொடுக்கும் நவீன கம்ப்யூட்டர்

தலை வலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் எதிர்பாராத வேளைகளில் ஏற்படும்போது உயிரே போய் விடுவது போல் பலர் துடித்துப் போய் விடுவதுண்டு. ஆனால், இவற்றையே சாக்காக...

Close