மலேசிய விமானத்தை பைலட்டே கடத்தினாரா? மலேசிய அரசு விசாரணை

காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 8-ந் தேதி காணாமல் போன அந்த விமானத்தின் பயணத்தை துவக்குவதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மீதான விசாரணையில் குறிப்பிட்ட அந்த விமானி கலந்து கொண்டதாக மலேசிய அதிகாரிகள் கருதுகின்றனர். நேற்று தலைநகர் கோலாலம்பூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து விமானத்தை கட்டுப்படுத்த பயன்படும் சைமுலேட்டர் என்ற கருவியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதைக் கொண்டு விமானத்தை எப்படி காணாமல் போகவைப்பது என பயிற்சி எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

விமானத்தை கண்டறியும் முயற்சியில் 25 நாடுகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானத்தை அதன் சுற்றுப் பாதையிலிருந்து மாற்றி அந்தமான் கடற்பகுதியில் பறக்கும் வகையில் ஜஹாரி செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அந்த விமானத்தை எங்காவது மறைவிடத்தில் தரையிறக்கி இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளதால் அந்நாட்டு அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட கடந்த எட்டு நாட்களாக இந்த விமானம் காணாமல் போனதிலிருந்து விக்கிரமாதித்தன் கதைகளில் வருவது போல் பல்வேறு கதைகள் வருகிறதே தவிர விமானத்தை பற்றி நம்பும்படியான தகவல் இது வரை வெளிவரவில்லை என்பதே முற்றிலும் உண்மை.

Read previous post:
‘மான் கராத்தே ச்சும்மா கிழி கிழி கிழி..’ ஹன்சிகாவின் தமிழில் மிரண்ட கூட்டம்!

ஹன்சிகா தமிழ்நாட்டின் மருமகளாகிவிடுவார் என்று ஊரே கூடி நின்று பேசும்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசிவந்த ஹன்சிகா, அந்த லவ் புட்டுக் கொண்ட பின்பு அழகு தமிழில், அதுவும் கொஞ்சம்...

Close