மழைவேண்டி கவுண்டமணி டான்ஸ்…. அடுக்குமாப்பா அக்கிரமம்?

தமிழ்சினிமாவில் மழை வரவழைக்கும் விஷயத்தை கிண்டி கிழங்கெடுத்திருக்கிறார்கள் பல இயக்குனர்கள். கிழக்கே போகும் ரயில் படத்தில் மழை வர வேண்டி ஊரில் ஒருவரை அம்மணமாக நடக்க விட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ராதிகாவை நடக்க விட்ட கொடுமையெல்லாம் நடந்தது. கண்ணாடி நல்லா துடைச்சு போட்டு பார்த்துட்டேன். ஒண்ணுமே தெரியலேப்பா… என்று அந்தகால பெருசுகள் அலுத்துக் கொண்ட கதையெல்லாம் அப்போது நடந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை மழைவேண்டி தவமிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் தமிழ்சினிமாவும் தன் பங்கை அவ்வப்போது கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் நக்கல் என்று அப்பணி நடந்து கொண்டேயிருந்தாலும், வரவேற்க வேண்டிய விஷயம்தான் அது.

இதோ- கவுண்டமணியும் மழை வேண்டி டான்ஸ் ஆட ஆரம்பித்திருக்கிறார். இதன் காரணமாக வருண பகவானுக்கு ஜுரம் வந்தால் அது 49 ஓ படத்தின் இயக்குனர் ஆரோக்கியதாசையே சேரும். இந்த படத்தில் ஒரு பாடல் கவுண்டமணி மழை வேண்டி டான்ஸ் ஆடுவது போல அமைத்திருக்கிறாராம். இதற்கான படப்பிடிப்பு தஞ்சையில் நடந்திருக்கிறது. வெகு காலம் கழித்து கவுண்டர் தன் ஸ்டெப்பை போட்டிருக்கிறார்.

பார்த்தவர்கள் ‘இடி’ சிரிப்பு சிரித்திருக்கிறார்கள். அதன் காரணமாக கண்களில் ‘மழை’
வந்திருக்கும்!

Goundamani dances to bring in rains in 49-O

Gaoundamani’s come back film 49-O directed by Arokiadas is happening currently at Thanjavur. There is a scene in which the villagers pray for rains to come. For this particular scene Goundamani has danced with his steps, after a long time. Those who watched the shoot were pouring their appreciation for the veteran comedian, while laughing at the antics he had done during the song sequence. The director seemed to be a happy man as the scene has come out good.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘உழவன் தாத்தா வந்திருக்கேன்…. ’ தாஜ்நுர் இசையில் துள்ளாட்டம் போட்ட சேலம்!

உழவன் தாத்தா வந்திருக்கேன் உழவன் தாத்தா வந்திருக்கேன் அறிவை வாங்கி பரிமாறு அழிவை நோக்கி போராடு உரமான உடலோடு உரமில்லா பயிரோடு... என்று தொடங்குகிறது அந்த பாடல்....

Close