மாணவர்களுக்கு ஆரோக்கிய வழிகாட்டும் ‘புதிதாய் வாழ்வோம்’

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் ‘புதிதாய் வாழ்வோம்’ மாணவர் வழிகாட்டல் நிகழ்ச்சி கிண்டியிலுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டஇந்நிகழ்ச்சியைபுதிய வாழ்வியல் மலர் நடத்தியது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், பிரபல சித்த மருத்துவர்அருண் சின்னையா, அக்குஹீலர் உமர் ஃபாரூக், மனநல ஆலோசகர் வாசுகி மதிவாணன், சமூக ஆர்வலர் தாமோதரன்,ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய வாழ்வியல் மலரின் நிறுவனரான ஜெ.ஜெயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புதியவாழ்வியல் மலரின் தலைமைச் செயல் அலுவலர் திலகவதி, நிர்வாக ஆசிரியர் ஜெயராணி, செல்லமாள் பெண்கள் கல்லூரிமுதல்வர் முனைவர் வி.ஜி.விஜயலக்‌ஷ்மி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இளைஞர்கள் உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் தான் அவர்களுக்கும் சமூகத்துக்கும் பயன் கிடைக்கும். இந்தக் கருத்தை மையப்படுத்தியதாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. “உணவே மருந்து, மருந்தே உணவு”என்றிருந்த உணவுப்பழக்கத்தால்தான் நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்தோடு வாழ முடிந்தது. அம்மாவின்அன்பை விட கடுக்காய் சிறந்தது” என்ற மருத்துவர் சின்னையா, ”துரித உணவுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வரும்இன்றைய தலைமுறையினர், அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த எதிர்மறை விளைவுகளை அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு ஏற்படுத்திக்கொள்ளப்படும் முகமறியா உறவுகளால் சிக்கல்கள்எழுந்திருப்பதாக தெரிவித்தார் மனநல ஆலோசகர் வாசுகி மதிவாணன். ”இத்தகைய தகவல் தொடர்பு சாதனங்களை அதிகமாகபயன்படுத்தும் இளம் தலைமுறையினருக்கு, அதன் சாதக பாதகங்களை குறித்த போதுமான விழிப்புணர்வு அவசியம் தேவை”என்றார். அடுத்ததாக பேசிய அக்குஹீலர் மருத்துவர் உமர் ஃபாரூக், “இன்று நாம் மருந்துகள் என்று குறிப்பிடும் அனைத்தும்விஷத்தன்மையை கொண்டிருக்கிறது. நோய்களை சமாளிக்கும் ஆற்றலை நம்முடல் இயற்கையாகவே பெற்றிருக்கிறது. அதனால் மருந்தின்றி வாழப் பழக வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய முனைவர் தாமோதரன், “நல்லறங்கள் செய்வதற்கு அடிப்படைத் தகுதி மனதை பக்குவப்படுத்துவதுதான்.புத்தருக்கு போதி மரத்தின் அடியில் ஞானம் கிடைத்ததாக சொல்கிறோம். ஆனால், அவருக்கு ஆலமரத்தின் அடியில் இருந்தாலும் ஞானம் கிடைத்திருக்கும். இங்கு, அவருக்கு ஞானம் கிடைக்க செயலாற்ற துணைபுரிந்தது மனதுதானே தவிர மரமல்ல. நாமும் சரியான கோணத்தில் சிந்திக்கும்போது நற்செயல்கள் மலரும்” என்றார் அவர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் எஸ்.வி. சேகர், சமூக அமைப்பில் ஒருவருக்கொருவர் உதவி புரிந்துவாழவே தலைப்பட்டுள்ளோம் என்றும், அதில் நமக்குள்ள பங்களிப்பு என்ன என்பதை அறிந்து அதை செயலாற்ற வேண்டும்என்றும் வலியுறுத்தினார். ”முன்னோர்கள் காட்டிச் சென்ற ஆரோக்கிய வழிமுறைகளை, இன்றைய இளம்தலைமுறைமறந்துபோனதே, தற்போது அவர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்” என்றார் அடுத்து பேசிய ஜெ.கே.அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜெயகிருஷ்ணன்.

சமூகத்தில் நேர்மறை எண்ணங்களை கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு குறித்து விளக்கிப் பேசினார் ’புதிய வாழ்வியல்மலர்’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஜெயராணி. குடும்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள மாறுதல்களாலும் மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்வி அமைப்பாலும் அறநெறிகளை, நல்வாழ்க்கைக்கான முறைகளை எடுத்து சொல்வதற்கு வழியில்லாமல் போய்விட்டது. சமூக வளர்ச்சியையும் மனித நாகரிகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஊடகங்கள் அந்த பொறுப்பை கையிலெடுத்து நல்வாழ்க்கைக்கு தேவையானவற்றை இந்த தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்’’ என்றார்.

இந்தியாவின் இளைஞர்கள் உலகளவில் அறிவாளிகளாக திகழும் போது அவர்கள் ஆரோக்கியமற்றவர்களாக இருப்பது வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட, ’புதிய வாழ்வியல் மலர்’ பத்திரிகையின் சி.இ.ஓ. திலகவதி, ”இயற்கையோடு இணைந்து வாழும்விலங்குகள் தம் ஆயுள் காலத்தை பூரணமாக வாழ்ந்து முடிக்கும்போது, ஆரோக்கிய வாழ்வுக்காக பல்வேறு முயற்சிகள்மேற்கொள்ளும் மனிதர்கள், தங்கள் ஆயுட்காலத்தில் பாதியைக் கூட கடப்பதில்லை. காரணம் வாழ்வியல் சார்ந்தபிரச்சினைகள்.” என்றார்.

மாணவிகள் ஆர்வத்துடன் கேட்ட சந்தேகங்களுக்கு, சிறப்பு விருந்தினர் பதிலளித்தனர். இறுதியாக, ”’நல்லுடல், நல்லெண்ணம், நற்செயல்’ இம்மூன்று நெறிகளையும் கடைப்பிடித்து பொறுப்பான குடிமக்களாக வாழ்வோம்”என்றுமாணவிகள்உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர். கல்லூரி மாணவர்களை உற்சாகப்படுத்தி வழிகாட்டும் ’புதிதாய் வாழ்வோம்’ நிகழ்ச்சி இக்கல்லூரியில் இரண்டாவது முறையாக, மாலை நேரக் கல்லூரி மாணவர்களுக்காக நடந்தது. மற்ற கல்லூரிகளிலும் தொடர்ந்துநடத்தப்படவிருக்கும் இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே ஆரோக்கியம் குறித்து தாக்கத்தை உண்டாக்கி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“ காதலி காணவில்லை “ கிஷோர் – ஹார்திகா நடிக்கிறார்கள்

மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் “ காதலி காணவில்லை “ படத்தின்...

Close