‘மான் கராத்தே ச்சும்மா கிழி கிழி கிழி..’ ஹன்சிகாவின் தமிழில் மிரண்ட கூட்டம்!
ஹன்சிகா தமிழ்நாட்டின் மருமகளாகிவிடுவார் என்று ஊரே கூடி நின்று பேசும்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசிவந்த ஹன்சிகா, அந்த லவ் புட்டுக் கொண்ட பின்பு அழகு தமிழில், அதுவும் கொஞ்சம் அசைவ தமிழில் பேசி எல்லாரையும் வியக்க வைத்தார். மான்கராத்தே படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்தான் தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை மேடையாக்கிவிட்டு ஓய்ந்தார்.
எதற்காக சொன்னார் என்றே புரியவில்லை. ‘கடுக்கு சிருத்தாலும் காறம் கொரயல்ல…’ என்று அவர் சொல்லி முடித்தபோது பலத்த கைத்தட்டல். (கடுகு சிறுத்தாலும் காரம் குறையல என்பதைதான் அப்படி) அதற்கப்புறம் மான் கராத்தேவின் அருமை பெருமைகளை ஒரே வாக்கியத்தில் உள்ளடக்கியது அவரது நவீன தமிழுக்கு சிறந்த உதாரணம். என்ன சொன்னார்? எப்படி சொன்னார்? என்பதை நேரில் கண்டவர்கள் பாக்கியசாலிகள்.
‘மான் கராத்தே ச்சும்மா கிழி கிழி கிழி..’ என்று கூறிவிட்டு அவர் அமர, கொஞ்ச நேரம் விக்கித்து திக்கித்து போய் அமர்ந்திருந்தது கூட்டம்.
Hansika shows off her versatility in Tamil
During the launch of audio of Maan Karate, taking cue from Siva Karthikeyan’s speech that he has avoided talking to Hansika in the sets because she always speaks in English, Hansika the female lead of the film tried her hand in speaking on the occasion in Tamil. Though there were blunders she has to be appreciated for ignoring how people may react to her Tamil speaking and went ahead. On the film, she said “kadukku siruththalum kaaram korayalle’ in a nutshell. What she meant by that only she is able to uncover it. Still, kudos to her for making efforts to speak the local language.