மாப்ளே, எனக்கு விட்டுக்கொடுத்துரு… – ஆர்யாவிடம் அலறிய ஜீவா

பெரிசா பிசினஸ் இல்லேன்னாலும் ‘பெரிஸ்ஸ்ஸ்ஸ்சா’ ஆசைப்படுற ஹீரோக்களின் பேராசை மனசுக்கு கோடம்பாக்கத்தில் திரும்பிய இடத்திலெல்லாம் உதாரணம் இருக்கிறது. அப்படி ஒரு உதாரணம்தான் நாம் சொல்லப் போவதும். கோ- படத்திற்கு பிறகு ஜீவாவுக்கு சொல்லும்படியாக ஒரு படமும் அமையவில்லை. தொடர் தோல்விகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாடி வருகிற ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் ஓடி ஒளிகிற அளவுக்குதான் சம்பளம் கேட்கிறாராம். இதோ ஒரு லேட்டஸ்ட் கிறுகிறு…

ஃபாசில், ஷங்கர் போன்ற இயக்குனர்களிடம் மேனேஜராக இருந்த விமல் என்பவர் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்கவிருப்பது ஈரம் பட இயக்குனர் அறிவழகன். ஜீவாவிடம் கதை சொன்னாராம் அறிவழகன். ஆஹா பிடிச்சுருக்கு. நானே நடிக்கிறேன் என்றவர் அதற்கப்புறம் கேட்ட சம்பளம்தான் ஆனைமலை கந்தனுக்கே அடுக்காத சமாச்சாரம். கொஞ்சம் குறைச்சுக்கங்க… இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்ச்ச்ச்ச்ச்ச்சம் என்றெல்லாம் அவரை உருக்கினாலும் மனுஷன் அசருவதாக இல்லை. இவ்வளவு சம்பளம் கொடுத்து இவரை கமிட் பண்ணுவதற்கு இதே சம்பளத்தை ஆர்யாவுக்கு கொடுத்தால் பிசினசுக்கு பிசினசும் ஆச்சு. அவரே கிசுகிசுக்களை கிளப்பிவிட்டு படத்திற்கு இலவச பப்ளிசிடியும் தந்துவிடுவார் என்று நம்பிய தயாரிப்பு தரப்பு, அப்படியே நைசாக ஆர்யா வீட்டுக்கு போய் இறங்கிவிட்டது.

இதையெல்லாம் மோப்பம் பிடித்து போட்டுக் கொடுக்கவென்றே நாரதர்கள் திரிவார்கள் அல்லவா? அப்படி ஒரு நாரதர் விஷயத்தை ஜீவாவிடம் சொல்ல, அலறியடித்துக் கொண்டு ஆர்யாவுக்கு போன் செய்தாராம் அவர். மாப்ளே… எனக்கு ரொம்ப பிடிச்ச கதைடா அது. அவங்களை திரும்பி வரச்சொல்லு. கொடுக்கிற சம்பளத்தை வாங்கிட்டு நடிக்கிறேன் என்றாராம்.

குரங்குகள் இருக்கிற ஏரியாவில் குச்சியோடதான் நடமாடணும்னு சும்மாவா சொன்னாங்க?

Arya’s success is giving Jiva a tough time

Jiva is the senior while Arya has entered the films subsequently. But currently the success rate Arya has, is giving a tough time to senior Jiva. After ‘Ko’ Jiva did not have any hits to his credit and his film assignments are also fast drying out, as his remunerative demands seems to be much higher, and success of the film is also not assured due to star power, while Arya’s salary is less comparatively, and the producer gets star value because of his recent successes and free publicity to the producer, thanks to the gossips Arya can create through link-ups. One such incident occurred recently. The ‘Eeram’ director approached Jiva for a film and Jiva having impressed with the script immediately gave his consent to do the film. But the game changer was the remuneration demanded by Jiva which forced the producer to approach Arya, for the reasons above. Arya too impressed and agreed. But Jiva having learnt that the film has been given to Arya through his sources, immediately called up Arya over phone and requested him to part with it back to him and he would do the film for the salary reportedly told to him. But one fail to understand how Jiva is so ignorant when his father himself is a reputed producer and how they would work for signing the heroes and heroines for the film. Well! At least now Jiva can really understand how the film industry works.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஹாரிஸ் ஜெயராஜின் மாளிகை – கடைகோடியில் பெற்றோர்! அடுக்குமாப்பா இதெல்லாம்?

வெள்ளை மாளிகையை பெயர்த்து எடுத்து வந்ததை போல தனது வீட்டை பிரமாண்டமாக கட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘எல்லாப்புகழும் ஏசுவுக்கே’ என்று கையெடுத்து கும்பிட்டால் கூட தப்பில்லை....

Close