மாயமான விமானத்தில் இருந்து வந்த கடைசி வாசகம் என்ன?
ஆனால், அந்த விமானத்தில் இருந்து கடைசியாக ‘‘குட்நைட் மலேசியன் 370” என்ற வாசகம் கேட்டதாகவும் இதை யார் பேசியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மலேசியா நேற்று அறிவித்தது.
இதற்கிடையே, அந்த விமானத்தில் சென்றவர்களின் உறவினர்கள், மலேசிய அரசு இன்னும் சரியான தகவல்களை தராமல் மறைக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். மலேசிய விமானத்தை தேடும் முயற்சியும் தொடர்ந்து நடக்கிறது.
இன்னும் 8 நாட்களில் அந்த விமானத்தின் கறுப்பு பெட்டி, பேட்டரி தீர்ந்து விடும் என்பதால் அதை கண்டுபிடிப்பது மிக சிரமம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.