‘மாஸ்னா அது விஜய் சார்தான். வேற யாரும் இல்ல. இல்ல. இல்ல..’ விஜய் முன் சாமியாடிய விநியோகஸ்தர்

‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்….’ என்று படம் ரிலீஸ் ஆன ரெண்டாம் நாளே பிரஸ்சை அழைத்து ‘இந்த நல்ல விஷயத்தை நாட்டுக்கு சொல்லிடுங்க’ என்று சொல்வது ஹீரோக்களின் வழக்கமாக இருக்கிறது. அப்படிதான் ஜில்லா படத்தின் சக்சஸ் மீட்டுக்கும் பிரஸ்சை அழைத்திருந்தார்கள். ஏதோ கண்ணீர் அஞ்சலி கூட்டத்துக்கு வந்தவரை போலவே அமர்ந்திருந்தார் விஜய். அது அவரது சுபாவம் என்றாலும், அவரது கண்களில் ஏதோவொரு களைப்பும் சோர்வும் இருந்தது. ஒருவேளை இந்த சக்சஸ் மீட்டுக்காகவே லண்டனிலிருந்து திரும்பிய களைப்பாக கூட அது இருந்திருக்கலாம்.

அங்கு வந்திருந்த சென்னை, மதுரை, கோவை, மற்றும் எப்எம்எஸ் விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும், ‘ஜில்லா படம் நல்ல கலெக்ஷன். நாங்க சந்தோஷமா இருக்கோம்’ என்றார்கள். அதிலும் மதுரை ஏரியாவை வாங்கியவர் விஜய்யின் தீவிர ரசிகர் மன்றத்தை சேர்ந்தவராம். மாஸ்னா அது விஜய் சார்தான். வேற யாரும் இல்ல. இல்ல. இல்ல.. என்றார் ஆவேசத்தோடு. இந்த சமயத்தில் விஜய்யின் முகத்தில் லேசாக வந்துவிட்டு போன பிரகாசத்தையும் கவனிக்க முடிந்தது.

பொதுவா சக்சஸ் மீட்ல நான் கலந்துக்கறதில்ல என்று ஆரம்பித்த விஜய், என்னோட முதல் நன்றி என்னுடைய ரசிகர்களுக்குதான். அவ்வளவு பனி காலத்திலேயும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விடியற்காலை மூணு மணிக்கெல்லாம் வந்து நின்று பேனர் கட்டியிருக்காங்க. அந்த வீடியோவை நான் பார்த்தேன் என்றார். அப்படியே ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லி வந்தவர், படத்தில் தன்னுடைய தம்பியாக நடித்திருக்கும் மஹத் பற்றி சொல்லும்போது ‘அழகான ஹீரோ’ என்று அவரை பற்றி குறிப்பிட, வெட்கத்தில் முகம் சிவந்தார் மஹத்.

வீரம் படமும் நல்லா ஓடிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன். நண்பர் அஜீத், டைரக்டர் சிவா, தமன்னா ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள் என்று விஜய் கூறியதும் மேடையிலிருந்தவர்கள் கைதட்டினார்கள். மீட் நிறைவடைந்ததும் புகைப்படக்காரர்களுக்கு சேர்ந்தாற் போல ஒரு போஸ் தரும் சடங்கு. அதை முடித்த கையோடு மின்னலை போல ஓட்டலை விட்டு வெளியேறினார் விஜய். அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள தயாராக இருந்த ஓட்டல் பெண்கள் அவரை சூழ்வதற்குள், தள்ளூ தள்ளேய்… என்று எல்லாரையும் மியூட் பண்ணிவிட்டு கிளம்பியது விஜய்யின் ஹிட்டர்ன் ஹேண்ட்ஸ்!

Vijay thanked his fans and congratulates Ajith and Siva

Vijay, director Neson and his team arranged the success meet of Jilla. Speaking at the success meet, Vijay said that he is happy that his film has turned out to be a good hit. He also said that he had watched the video of his fans decorating the theatres as early as 3 am in the morning, and watching the film at 4.00 am in the morning. He pointed out that he was overwhelmed by their emotions, and has thanked his fans for their love. He said that the event is more of a thanks giving meet than success meet. Stating that he was never keen on success meets and always tried to avoid it, Vijay pointed out that he agreed to it now only because of the respect he had for producer RB Choudary and for his fans who wanted to celebrate the success. While of the distributors of Jilla praised that the film has given them good returns, a particular distributor from Madurai was surmounted by emotions shouting ‘if it is mass, it ought to be Vijay sir.’

He also took the opportunity to congratulate his good friend and colleague Ajith on the astounding success of Veeram and wished director Siva and Tamannahall the very best.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எங்களையா கேவலப்படுத்துறீங்க? ஏ.ஆர்.முருகதாசுக்கு நோட்டீஸ்!

இனி குடுகுடுப்பை காரரை படத்தில் காட்டினாலும் அவர் சார்ந்த சங்கத்திடமும் நோ அப்ஜக்ஷன் சர்டிபிகேட் வாங்கினால்தான் உண்டு போல. அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட ராஜா...

Close