‘மா நன்னா போலீஸ்!’ விழாவில் சினேகா , இது ஆந்திரா மிளகாய்ங்க…

சினேகாவின் கொண்டையில் முடிந்து கொள்ள ஏராளமான ஹிட்டுகள் இருந்தாலும், ரொம்பவே ஸ்பெஷல் என்று சொன்னால் அது ‘ஹரிதாஸ்’தான். தனது கல்யாண அறிவிப்பு வந்த பின் அவர் கமிட்டான படம் இது. ‘உங்களுக்கு கல்யாணம் ஆனா என்ன? ஆவாட்டி என்ன? இந்த கேரக்டருக்கு நடிக்க உங்களை விட்டா ஆளே இல்லை’ என்று வெண்ணிலா, ஸ்டாபெரி போன்ற குளிரடிக்கும் ஐட்டங்களை அவர் தலையில் ஏற்றி நடிக்க வைத்தார்கள்.

சினேகாவுக்கு கல்யாணம் ஆகிருச்சே என்பதே தெரியாதளவுக்கு நம்மோடு சினேகமாக சிரித்து படத்துக்கே ஒரு டன் அந்தஸ்தை ஏற்றிக் கொடுத்தார் அவரும். இவ்வளவு குவாலிடியான படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் என்றால் சினேகாவின் மனசுக்கு எப்படியிருக்கும்? ரொம்ப ரொம்ப ஆர்வமாக எப்போ ஆடியோ ரிலீஸ் பண்றீங்க என்று கேட்டுக் கொண்டேயிருந்தாராம் டைரக்டரிடம்.

அவர் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்தேவிட்டது. எதிர்வரும் திங்கட் கிழமை ஐதராபாத்திலிருக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ். சினேகா, கிஷோர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வேல்முருகன், வசனகர்த்தா வெங்கடேஷ், தயாரிப்பாளர் டாக்டர் ராமின் சகோதரர் வை.கருணாநிதி ஆகியோரும் ஐதராபாத் சென்றுள்ளார்கள்.

ஆமாம்… இங்க ஹரிதாஸ். அங்க பேர் என்னவாம்?

‘மா நன்னா போலீஸ்!’ அப்படின்னா எங்க அப்பா போலீஸ்னு அர்த்தமாம்.

Haridas dubbed in Telugu, ready for release

 

Sneha, who played an important role in the critically acclaimed film, Harida, after her marriage with Prasanna, is excited that the film is being dubbed in Telugu as ‘Maa Nanaa Police’. The audio release of the film is to be held on 21st Oct. at Prasad Studios, Hyderabad. Sneha, Kishore, Camera person Rathnavelu, Dialogue writer Venkatesh, Executive Producer Velmurugan and V Karunanidhi, producer Dr. Ram’s brother, will be participating in the event.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆரம்பம் ரிலீசின் போது சென்னையில் இல்லை அஜீத்! -‘ஃபேஸ்புக்குக்காக போட்டோ எடுக்கும் நிருபர்கள் சங்கம்’ ஏமாற்றம்!

‘தலயே’ வெடிச்சுப்போற அளவுக்கு ஒரு கேள்வி. ‘ஆமா... ஆரம்பம் படத்தின் பாடல்கள் வெளியாகிருச்சா, இல்லையா?’ ‘ம்க்கூம்... எங்க வெளியாகிச்சு? என்னைக்கு படம் ரிலீசோ, அன்னைக்கு உள்ளேயே உட்கார்ந்து...

Close