மிஷ்கின் ஆரம்பித்து வைத்த சண்டை, – கிலி பிடித்தாடும் டெலி உலகம்!

 

ஓரமா படுத்திருந்தவங்க மேலேயும் லாரி ஏறிட்டு போனா என்னாகும்? அப்படிதான் ஆகியிருக்கிறது மிஷ்கின் பேச்சினால் வந்த வம்பு சண்டை. சமீபத்தில் நடந்த ஒரு தொலைக்காட்சி துவக்கவிழா நிகழ்ச்சி அது. (இதே நிகழ்ச்சியால எத்தனை வம்பு தும்புகள்… அப்பாடா) மைக்கை பிடித்த மிஷ்கின் அது தொலைக்காட்சி துவக்க விழா என்றும் பாராமல் தொலைக்காட்சி தொடர்களையெல்லாம் வெளுத்து வாங்கினாராம். நான் டிவி பார்த்தே இருபது வருஷம் ஆச்சு. ஒரு டயலாக்கை ஒரு மாசத்துக்கு பேசுவாங்களே… என்றெல்லாம் அவர் கமென்ட் அடிக்க, அதே விழாவிலிருந்த மனேபாலா போன்ற நடிகர்கள் நொந்தே போனார்கள்.

சின்னத்திரையின் சூப்பர் ஸ்டாரிணியான தேவயானியின் கணவர் ராஜகுமாரனிடம் இது குறித்து பிரபல வார இதழ் ஒன்று கருத்து கேட்க, ‘மிஷ்கினா… அவரு ஒரு மன்சூரலிகானாச்சே’ அர்த்த ராத்திரியிலும் கண்ணாடி போட்டுட்டு திரிவாரே அவர் என்று கிண்டல் செய்துவிட்டார். (இதைதான் வேலியில் போற ஒணானை வம்புக்கு இழுத்த கதை போலிருக்கு)

அப்படியே மன்சூரலிகானையும் சந்தித்து ராஜகுமாரனின் எள்ளலை அவரிடம் பற்ற வைக்க, வெறிச் சிரிப்பு சிரித்தாராம் அவர். ‘ராஜகுமாரனுக்கு லிப்ஸ்டிக் போடவே நேரம் பத்தல. அவரு சொந்த காசுல படம் எடுத்தா தெரியும். தேவயானி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசுல படம் எடுக்கிறவருதானே?’ என்று தன் பங்குக்கு அருவாளை வீச…. ஏரியா முழுக்க அனல் தணல்.

பிரச்சனையை ஆரம்பித்து வைத்த மிஷ்கின் எங்கு போனாரென்றே தெரியவில்லை. எங்காவது வேறொரு மேடையில் மிஷ்கினை பிளேடை விட கூரான பற்களோடு பார்க்கலாம்…

Mysskin blasts makers of TV serials

During the inauguration of a TV channel recently Mysskin blasted the makers of TV serials. He said the serials are made to stretch out to the maximum point testing the tolerance limit of the viewers. He is reported to have told that an episode would cover a dialogue. Though his speech seems to have hurt Tele actors like Manobala, it was Rajakumaran who made a big issue out of it. Thanks to Devyani, his wife he is leading a comfortable life. He made fun of Mysskin comparing him with Mansoor Ali Khan, pointing out wearing dark glasses at nights.

Mysskin was not available for responding to Rajakumaran’s words. Although Mysskin was right in his view point, he could have put it subtly to avoid hurting others. We feel Rajakumaran’s comments don’t deserve any response, perhaps Mysskin too must have thought the same way!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
2015 வரைக்கும் அனுஷ்காவுக்கு கல்யாணம் இல்லே…

  அனுஷ்காவின் கல்யாண செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் நாளில், எத்தனை இதயங்கள் வெடித்து சிதறுமோ...? ஆனால் அப்படியொரு செய்தி வராமல் இறுக்கி பிடித்து அத்தனை இதயத்தையும் பாதுகாத்துக்...

Close