மீண்டும் கார்த்தி ஜோடியாக தமன்னா இனிமே ராசி வொர்க்கவுட் ஆகுமாம்…
விரைவில் ‘உலகம் யாவையும் தமன்னாவாக்கலும்…’ என்று ஸ்லோகம் படிப்பார்கள் போலிருக்கிறது தமன்னா ரசிகர்கள். ஏனென்றால் ‘ ராசியான நடிகையாக்கும்… ’ என்பதை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நிரூபித்துவிட்டார் அவர். வீரம் அவரது ரீ என்ட்ரி என்பதும், இதற்கு முன்பாக இந்த கேரக்டரில் நடிக்க அழைக்கப்பட்டவர் காஜல் அகர்வால் என்பதும் நாடறிந்த செய்தி.
கடைசி நேரத்தில் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தமன்னாவை ரெகமன்ட் செய்ய, அதை பெரிய மனதோடு ஏற்றுக் கொண்டார் அஜீத். சிவா நினைத்த மாதிரியே படம் ஹிட். ஏனென்றால் சிறுத்தையிலும் தமன்னா இருந்தார். படம் ஹிட். இந்த தொடர்ச்சி அவ்வளவு எளிதில் நிற்காது போலிருக்கிறது. வீரம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கவிருக்கும் படத்தில் தமன்னாதான் ஹீரோயின். விசேஷம் இதில் இல்லை. இப்படத்தின் ஹீரோ யாரென்பதில்தான் அடங்கியிருக்கிறது அது.
சிறுத்தை படத்தின் நாயகன் கார்த்திதான் அந்த ஹீரோ. அப்படின்னா தமன்னாவை மீண்டும் உள்ள சேர்க்க மாட்டாங்களே… என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. தமன்னாவை தொலைத்த பிறகு கார்த்தியும் வரிசையாக தோல்வியைதானே சந்தித்தார்? அதனால் தமன்னா சென்ட்டிமென்ட் அவருக்கும் வந்துவிட, மேளதாள பூஜை புனஸ்காரங்களோடு தமன்னாவை கட்டிப்பிடிக்க தயாராகிவிட்டார்.
இந்த படத்தில் தமன்னா இருந்தால்தான் கார்த்தி என்கிற அளவுக்கு தமன்னா பேய் சிவாவை பிடித்து உலுக்கிக் கொண்டிருப்பதாகவும் கேள்வி. அழகான பேய்… ஆட்டிட்டுதான் போகட்டுமே!
Siva decides on Tamannah for his next film
Director Siva is on cloud nine as he gave back to back hits in Tamil with Siruthai and the recent blockbuster Ajith’s veeram. The interesting part is that Siva believes Tamannah as the luck mascot for him. He recommended Tamannah in place of Kajal Aggarwal to Ajith to play opposite to him, to which Ajith acceded to his recommendations. It has proved the point that she indeed is the lucky mascot for him and his films.
Now he is preparing his next film in which he has decided to play his lucky star as the heroine. Karthi will be the lead for the film. Karthik who had a good outing with Tamannah earlier somehow parted ways and since then Karthik’s films met disasters at the BO, and Tamannah was out of focus in Kollywood. With Veeram Tamannah has proved her reputation of a successful actress, producers seem to happy to cast her in the film.
It is heard that Siva goes on to say that only if Karthi agrees to play the lead with Tamannah he would continue the project with Karthi.
Why not? Karthi too badly needs a hit, while Tamannah will establish her grip in Kollywood. It is mutual benefit for everyone in the industry, after all.