மீண்டும் ரசிகர் மன்றம்! அஜீத் மனதில் புதிய முடிவு…

தேன் கூட்டில் கல்லெறிந்தால் கூட, ஈ தன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளாது. அப்படிதான் அஜீத் ரசிகர்களும்.

தமிழ்நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து தனக்கு புகார் கடிதங்கள் வந்து குவிந்ததாலும், தனது ரசிகர் மன்றத்தை தலைமையேற்று நடத்துகிற யாராலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தாலும், மன்றத்தையே கலைக்கிறேன் என்று அதிரடியாக ஒரே நாளில் எல்லா மன்றங்களுக்கும் மூடு விழா நடத்தினார் அஜீத். சில ஏரியாக்களில் அதிமுக, திமுக என்று ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து இம்சை கொடுத்த காரணத்தாலும் இந்த முடிவை எடுத்தார் அவர். இப்படியொரு செயலை உலகின் எந்த மூலையிலும் எந்த நடிகரும் செய்ததில்லை. இருந்தாலும், நாங்க எப்பவுமே அஜீத்தின் தீவிர ரசிகர்கள்தான் என்று சொல்லாமல் சொன்னார்கள் அவர்கள்.

எப்படி? ஒவ்வொரு முறை அஜீத்தின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் தாறுமாறான ஓப்பனிங் கொடுத்துதான் தங்கள் அன்பை நிலைநிறுத்தினார்கள் அவர்கள். மன்றமே இல்லேன்னு சொல்லிட்டேன். அப்பவும் என் மேல இவ்வளவு அன்பு வச்சுருக்காங்களே… என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சமீபகாலமாக உணர்ச்சிவசப்பட்டு பேசிவரும் அஜீத், விரைவில் மன்றத்தை மீண்டும் இயங்க வைத்தால் என்ன என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் ‘தலைவா அரசியலுக்கு வா’ என்றெல்லாம் போஸ்டர் அடிக்கவோ, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகவோ மன்றத்தை பயன்படுத்தக் கூடாது என்கிற எச்சரிக்கையோடு…

எது எப்படியோ? அஜீத்தின் இந்த முடிவுதான் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், பக்ரீத் எல்லாம்!

Ajith is planning to restart fans club

Few years ago Ajith in a surprise action dissolved all his fans club, as was receiving large number of complaints on the running of the club. Also some of his fans are divided between political lines thereby causing inconvience to him. Ajith is the only actor who had dissolved his fans association and no other actor in the world has dared to do that. But despite this strong action by Ajith, his fans continue show their overwhelming love and affection on him. This is reflected in the huge opening for his films which only super star Rajini gets in Kollywood.

Because of this spontaneous affection and love, Ajith is now reconsidering his decision on the dissolution of his fans club. He is thinking of re-opening the fans association but with one very strong condition to his fans that there should not be any posters inviting him to lead any political party, and also not to misuse the fans club for political activity favouring political parties.

Well! While the fans should be definitely happy with his green signal, will they oblige the condition posed by the actor, is a million dollar question?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கருப்பு பணத்தை தடுக்க 7 நாடுகளில் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள்

வரி ஏய்ப்பு மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது. சில நாடுகள் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை...

Close