மீண்டும் வருகிறார் மிஷ்கின்

சினிமா எந்த குப்பையில் வேண்டுமானாலும் புரளட்டும்… அதை நான் பன்னீர் பாட்டிலில்தான் குளிப்பாட்டுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். அவரது இயக்கத்தில் சில படங்கள் ஆஹா ஓஹோ. சில படங்கள் கீழே விழுந்து பல்லையும் பெயர்த்துவிட்டு போயிருக்கிறது. ஆனாலும், ‘நான் சிவப்பு மனிதன்டா’ என்று விடாமல் மார் தட்டிக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். சமீபத்தில் வெளிவந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஜனங்களுக்கு கற்றுக் கொடுத்ததைவிட மிஷ்கினுக்கு கற்றுக் கொடுத்ததுதான் ஏராளம். சில காலம் தனது அலுவலகத்தை விட்டு அவர் வெளியே வராமலே இருந்தார். அவருக்கும் அவரது நிழல் புரட்யூசருக்கும் பயங்கர பைட்.

எப்படியோ? அந்த பிரச்சனைகளையெல்லாம் சமாளித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாராம். இந்த முறை அவர் நடிக்கப் போவதில்லை. அவருக்கு பதிலாக ஒரு முன்னணி ஹீரோ நடிப்பார் என்கிறார்கள். இந்த படத்தை அவரே தயாரிக்கப் போவதும் இல்லையாம். ஆமாம்… ஒரு மனுஷன் எத்தனை முறைதான் விழுந்து வார முடியுமாம்?

ஆனால் நடுவில் ஒரு செய்தி. மிஷ்கின் சிம்புவை சந்தித்தாராம். இருவரும் கதை பேசியிருக்கிறார்கள். முன்பே தவறவிட்ட படத்தை இப்போதாவது கைப்பற்றுவாரா சிம்பு?

Mysskin readying script for his next film!

Mysskin is one director who is on mission to make Kollywood comparable to world cinema standards. Whether he succeeds with his films or not, he would never deviate from his ambition and goal. The recent example is his last film Onayum Attukuttiyum though received critical reviews and praise by elite audience, he could not convert the praise in to money. Thus he had to take the loss in his strides. We all know how he created a sensation in pasting posters of the film on his own. But he is stern in his determination to make quality films.

We hear that he is readying a script for his next film. It is also heard that he would be casting a popular hero in the film which will be produced by a different producer. Some time back, Simbu and Mysskin have met and exchanged pleasantries while discussing a script. Both would be reviving the script this time, perhaps.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வர்றோம்… ஆனா வரும்போது? மாணவர்களிடம் ஹீரோக்கள்!

முன்பெல்லாம் பள்ளி கல்லுரிகளில் ஏதேனும் விழா நடக்கிறது என்றால் அதில் கலந்து கொள்ள லோக்கல் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அல்லது பட்டிமன்ற பேச்சாளர்களை அழைப்பார்கள்....

Close