மீரா ஜாஸ்மின் நாசா விஞ்ஞானியுடன் இணைகிறார்!

மீரா ஜாஸ்மின் நாசா விஞ்ஞானி பார்த்தியுடன் இணைகிறார்; விஞ்ஞானி திரைப்படத்திற்காக!
 
தன்னுடைய சிறப்பான நடிப்புத் திறமையால் நன்றாக அறியப்பட்ட மீரா ஜாஸ்மின் தற்பொழுது அதிகமாக எதிர்பார்க்கும் திரைப்படம் விஞ்ஞானி… காரணம் விஞ்ஞானி திரைப்படத்தில் அவருடைய நடிப்பாற்றலை மேலும் சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பார்த்தி சினிமா துறையில் சாதனை படைக்கும் நோக்கத்தில் தன்னுடைய சயிண்டிஃபிக் துறையிலிருந்து விலகி வருகிறார்.
 
விஞ்ஞானி – ஒரு சைண்டிஃபிக் திரில்லர் வகையிலான திரைப்படம். ஒரு இளம் விஞ்ஞானி தந்திரமாக விரிக்கப்பட்ட திருமண வலையில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவருடைய வாழ்க்கையே மாறிவிடுகிறது. விஞ்ஞானி – ஒரு ஆக்‌ஷன், திரில்லர், கிளாமர் மற்றும் காமெடி கலந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். அந்த விஞ்ஞானி உலகின் மிகப் பெரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். அப்போது நடைபெறும் அவருடைய திருமணம் அவருடைய குறிக்கோளை எவ்வாறு பாதிக்கிறது…? அது அவரது ஆய்வுக்கு சாதகமா பாதகமா…?!
 
பாடல்கள் வெளிநாடுகளில், கண்கவர் ஸ்டுடியோ செட்டிங்களிலும், அதேபோல் இந்தியாவின் அழகான பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுக்கூடங்கள் இத்திரைப்படத்தைப் பார்க்கும் மாணவர்களுக்கு பாடமாகவும், பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய வகையிலும் இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்தி படத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து விஜய் போராட்டம்?

கலைஞர் ஆட்சியிலிருக்கும் போது எம்ஜிஆர் நடித்த படங்களில் எல்லாம் கலைஞர் ஆட்சியை கண்டந்துண்டமாக கூறு போடுவார். ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள்...

Close