முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் புதிய ஐபோன் பயன்பாடு
இதில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகள், பால் (குறிப்பாக ஆடை நீக்கப்பட்ட பால்), புரதம், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் சர்க்கரை உயர் உணவுகள் போன்றவை முகப்பருவுடன் தொடர்பு கொண்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. சில ஆய்வுகளில் ஆண்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் பருக்களைத் தடுக்கும் தன்மை கொண்டுள்ளதும் தெரிய வருகின்றது. இவ்வாறாக ஒருவர் இந்தப் பயன்பாட்டை பயன்படுத்துவதன்மூலம் தங்களின் தோலின் தன்மைக்கு ஒத்துவரும் உணவுப்பொருட்கள் பற்றி அறிந்துகொள்வது எளிதாகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல் பயன்பாடு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஏப்ரல் முதல் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான ஐந்து மாதங்களில் 98 நாடுகளில் 5507 சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆய்வு தகவல் வினாக்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பதில் அளித்திருந்தனர். அவர்களில் 87 சதவிகிதத்தினர் ஒரு வருடத்துக்கும் மேலாகத் தங்களுக்கு முகப்பருத்தொல்லை இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். எனினும் இதற்காக எந்த மருத்துவரையும் சென்று பார்த்ததில்லை என்று 37 சதவிகிதத்தினர் கூறியிருந்தனர்.