முடிவுக்கு வந்த உதயநிதியின் வரிவிலக்கு போராட்டம்

வரிவிலக்கு சர்டிபிகேட் மட்டும் கிடைக்கவில்லையென்றால் அந்த தயாரிப்பாளரின் பாக்கெட்டை எலி கடித்த நிலைமைதான். அவர் சாதா தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, உதயநிதி ஸ்டாலின் மாதிரி பாக்கெட் பலமான நபர்களாக இருந்தாலும் சரி. எலி எலிதான். கடி கடிதான். ‘என் தங்கம் என் உரிமை’ மாதிரி இந்த வரிவிலக்கு பிரச்சனைக்கும் குரல் கொடுக்கிற பேக்ரவுண்ட் அவருக்கு இருந்ததால் தனது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கும் இது கதிர்வேலன் காதல் படத்திற்கும் வரிவிலக்கு தரப்படவில்லை என்று நீதிமன்றத்திற்கு போனார்.

தனது பேட்டிகளில் எல்லாம் தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்து பேசிக் கொண்டே வந்த உதயநிதிக்கு, சட்டம் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. வேறொன்றுமில்லை, அவரது இரண்டு படங்களுக்குமே வரிவிலக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிட்டதாம். நீதிமன்றத்தில் இவர்கள் வாதாடியது எப்படி தெரியுமா?

தனுஷின் மூணு படத்தை வைத்துதானாம். டாஸ்மாக்கில் கல்யாணம் செய்து கொள்வது மாதிரி அந்த படத்தில் காட்சியிருக்கிறது. அந்தளவுக்கு கூட எங்கள் படத்தில் காட்சிகளில் அருவறுப்பு இல்லை, அந்த படத்துக்கே வரிவிலக்கு கொடுக்கும் போது இந்த படங்களுக்கு கொடுத்தால் என்ன என்றாராம் வழக்கறிஞர். எப்படியோ? சான்றிதழ் கைக்கு வந்தாச்சு. இனிமேலாவது வரப்போகும் படத்தில் டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் படமெடுக்கட்டும் உதயநிதி.

Udhayanidhi Stalin proves his point on tax exemption!

Udhayanidhi Stalin was deprived of tax exemptions by the state government for his films continuously right from Oru Kal Oru Kannadi to the recent Idhu Kadhirvelan Kadhal. Vanakkam Chennai which he produced and distributed and Neer Paravai which he distributed were also not given the tax exemption. Udhayanidhi took the matter to the court and submitted that the tax exemption committee panel members should be replaced as they view the films with bias.

On 27th Feb. the court where he filed the case decided the case in favour of Udhayanidhi Stalin and granted exemptions to Oru Kal Oru Kannadi and Idhu Kadhirvelan Kadhal. Udhaynidhi in one of his tweets confirmed the news. It is heard that his counsel had argued in the court referring to Dhanush’s film 3 which has a sequence of lead pair getting married in a Tasmac shop was granted tax exemption, while his films OKOK and IKK were deprived of the same despite a clean image.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இன்னும் கட்சியே ஆரம்பிக்கல… ஆனால் கட்சியில் பிளவாம்? விக்கித்துபோகும் விஜய் மக்கள் இயக்கம்!

இன்னும் கட்சியே துவங்கவில்லை. அதற்குள் கடமுடா...? கொஞ்ச நாளைக்கு எல்லாரும் வாயை மூடிக் கொண்டிருந்தாலே நான் ஆரோக்கியமா சந்தோஷமா இருப்பேன். ஆனால் இருக்க விட்டால்தானே என்று விஜய்...

Close