முதல்வரின் கெடுபிடிக்குள் சென்சார் அமைப்பு?
முன்பு எப்போதும் இல்லாதளவுக்கு சென்சார் ஆபிசர்கள் கெடுபிடி காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தில் எங்காவது சிகரெட் பிடிக்கிற மாதிரி காட்சியோ, தண்ணியடிப்பது போல காட்சியோ வந்தால் அவ்வளவுதான். முறுக்கிக் கொண்டு கிளம்பிவிடுகிறது சென்சார். சம்பந்தப்பட்ட படத்திற்கு யுஏ சர்டிபிகேட்தான். முன்பெல்லாம் இப்படி வருகிற காட்சிகளை எப்படியோ சமாளித்து சேதாரமில்லாமல் வெளியே கொண்டு வந்த பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களே இப்போது மூச்சு முட்டுகிறார்கள். ஏன்?
பின்னணியில் பெரிய கதை ஒன்று இருக்கிறது. சென்சாரில் நடக்கும் குளறுபடிகள் பற்றி தி இந்து தமிழ் நாளிதழில் விலாவாரியாக ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்த கட்டுரையை படித்த முதல்வர் ஜெயலலிதா, சம்பந்தப்பட்ட துறை மீது ஒரு கண் வைக்க சொன்னாராம். இத்தனைக்கும் அது மத்திய அரசின் கீழ் செயல்பட்டாலும், படங்களில் வெளிப்படும் வக்கிரமும் வன்முறையும் ஆபாசக்காட்சிகளும் மாநிலத்தின் இமேஜை கெடுப்பதாக நினைத்தாராம்.
இந்த விஷயத்தில் தப்பு நடந்தா மன்னிக்கவே மாட்டேன். சென்சார் உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புக்கேற்ப கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும். பெரிய நிறுவனங்களின் படங்கள் என்பதால் சலுகை காட்டுவதும் சிறு படங்கள் என்றால் கத்தரிக்கோலை வைத்து மிரட்டுவதும் இங்கே நடக்கக் கூடாது. தப்பு என்றால் அது எல்லா நிறுவனங்களுக்கும் பொதுவானது. அதே போல சரி என்றாலும் எல்லா நிறுவனங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நீண்ட அட்வைஸ் தரப்பட்டதாம் முதல்வர் சார்பில்.
ஏது… பிரச்சனை பெரிசாகிவிடும் போலிருக்கிறதே என்று அஞ்சிய சென்சார் அதிகாரி முன்னை விட கடுமையாக நடந்து கொள்கிறாராம். பிரியாணி போன்ற படங்களுக்கு யுஏ கிடைத்ததும் அப்படிதான் என்கிறார்கள். இத்தனைக்கும் முதல்வருக்கு நன்கு அறிமுகமான சிவகுமாரே இந்த விஷயத்தில் தலையிட்டு தோற்றதாகவும் கூறப்படுகிறது.
முதல்வரின் இந்த கெடுபிடி தொடரட்டும்…
முதல்வரின் இந்த கெடுபிடி தொடரட்டும்…
then how the fack you expect get movie likes hollywood in tamil dumbass