முதல்வரை சந்திக்கணும்… -இயக்குனர் பாலசந்தர் முயற்சி
இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு இன்டஸ்ரியில் எப்போதும் மரியாதை உண்டு. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியையும், கலைஞானி கமல்ஹாசனையும் அறிமுகப்படுத்தியவர் என்பது மட்டுமல்ல, அவர்கள் இருவருமே பாலசந்தர் அழைத்தால், படுவேகத்தில் ஓடி வருபவர்கள் என்பதாலும்தான். ‘இவர்களின் முரட்டு அன்புக்கு ஈடாக நான் என்ன செய்யப் போகிறேன்’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனசிலிருக்கும் ஸ்கிரீனை ஓப்பன் பண்ணி விடுவார் பாலசந்தரும்.
இவ்வளவு அன்பும் பாசமும் மரியாதையும் இவர் மீது மற்றவர்கள் வைத்திருந்தாலும், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இவர் தாணு, மற்றும் எஸ்.ஏ.சி அணியை ஆதரித்தது சிலருக்கு பிடிக்கவில்லையாம். அதுவாவது பரவாயில்லை. தனது மகள் புஷ்பா கந்தசாமியை பொருளாளர் பொறுப்பில் போட்டியிட வைத்ததும் சிலருக்கு பிடிக்கவில்லை. தேர்தலில் புஷ்பா படுதோல்வியும் அடைந்துவிட்டார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் எந்த கட்சி பக்கம் என்கிற கேள்வியை தானாக உருவாக்கிவிட்டார்கள் சிலர். இதையெல்லாம் மனதில் வைத்து புழுங்கிய பாலசந்தர், தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம். அப்படி நேரம் கிடைக்குமாயின், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தனது அணுகுமுறை பற்றி முதல்வரிடம் விளக்கம் அளிக்கவும் நினைத்திருக்கிறாராம்.