முதல்வர் விழாவில் அஜீத்துக்கும் அவமதிப்பு?

முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் அஜீத்தும் கலந்து கொண்டாரா? இப்படியொரு கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்புகிற அளவுக்கு அஜீத்தின் புகைப்படத்தை புறக்கணித்திருக்கிறது மீடியாக்களின் செயல்பாடு.

பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பளிச்சென கண்ணில் படுகிறவர் அஜீத். அவரே ஒதுங்கிப் போனாலும் விடாமல் க்ளிக்கி தள்ளுவார்கள் பிரஸ் போட்டோகிராபர்கள். ஆனால் கடந்த 21 ந் தேதி நடைபெற்ற விழாவில் விஜய் விக்ரம் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கும் படங்களை பிரதானமாக பிரசுரித்த பத்திரிகைகள் அஜீத் படத்தை மட்டும் வெளியிடவே இல்லை.

இந்த விழாவில் மீடியாக்கள் பலவற்றுக்கு சுதந்திரமாக படம் எடுக்கவோ, செய்தி சேகரிக்கவோ முடியாத அளவுக்கு கெடுபிடிகள் இருந்ததுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். இருந்தாலும் அரசு தரப்பில் மீடியாக்களுக்கு அனுப்பட்ட போட்டோக்களில் அஜீத் படமே அனுப்பப்படவில்லையாம். இது திட்டமிட்டே நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அரசியலை பொறுத்தவரை ஓட்டு போடுவதை தவிர வேறெந்த விவகாரங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவர் அஜீத். அவரது படத்தை அரசே மீடியாக்களுக்கு அனுப்பாமல் தவிர்த்ததற்கு வேறென்ன காரணமாக இருக்க முடியும்? ஒண்ணுமே புரியல உலகத்துல….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
போயஸ்கார்டனில் பொசுங்கல் வாடை! -அண்ணன் தம்பிகள்தான் காரணமாம்…

தன் படங்களால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றால் விநியோகஸ்தர்களை கூப்பிட்டு ‘வச்சுக்கங்க உங்க பணத்தை’ என்று திருப்பித் தருகிற நேர்மை ரஜினிக்கு இருக்கிறது. ஆனால் அவரது மருமகனுக்கு இருக்கிறதா...

Close