முத்தக்காட்சிக்கு மூக்குதான் தடையா?

கும்கி வெற்றிக்கு பிறகு விக்ரம் பிரபுவும், எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பிறகு டைரக்டர் சரவணனும் கூட்டு சேரும் படம் இவன் வேற மாதிரி. படமும் வேற மாதிரி இருக்கும் என்கிற நம்பிக்கையை தந்த இரண்டு பாடல்களும், ட்ரெய்லரும் பிரஸ்சுக்கு காண்பிக்கப்பட விசிலடிக்காத குறையாக விடைபெற எழுந்தது பிரஸ். அந்த நேரத்தில்தான் அந்த கேள்வி அனைவரையும் சடர்ன் பிரேக் போட்டு நிற்க வைத்தது. இந்த கதை சட்டக்கல்லுரியில் நடந்த கலவரத்தை பின்னணியாக கொண்டதாமே?

ஏதுடா கலவரமாப் போச்சு… என்ற திடுக்கிடலுடன் அந்த கேள்வியை எதிர்கொண்டார் டைரக்டர் சரவணன். சார்… அப்படி சொல்ல முடியாது. இந்த படத்தில் நான் என்ன சொல்ல வர்றேன்னா… பொதுவா சில பேர் கண்ணுக்கு முன்னாடி நடக்கிற தவறான விஷயங்களை நமக்கு ஏன்னு கண்டுக்காம போவாங்க. ஆனால் என் ஹீரோ அப்படி செய்ய மாட்டார். எந்த தப்பா இருந்தாலும் தட்டிக் கேட்பார் என்று கூறியவர், அதற்கப்புறம் சொன்ன சில தகவல்கள் ‘பரபர’ கைக்காரர்களுக்கு கிடைத்த பப்பாளி துண்டு. என் முதல் படத்திற்கும் இந்த படத்திற்கும் சரியா இரண்டு வருஷம் கேப். இதே டிசம்பர் 14 ந் தேதிதான் எங்கேயும் எப்போதும் வந்துச்சு. இந்த படம் 13 ந் தேதி வருது. ஏன் இவ்வளவு தாமதம்னா அதுக்கு ஒரு ஹீரோதான் காரணம்.

எங்கிட்ட கதை கேட்டு படம் பண்ணலாம்னு சொல்லிட்டார். நானும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். திடீர்னு எனக்கு இந்த கதை கன்வின்சிங்கா இல்லேன்னு சொல்லிட்டார். அதற்கப்புறம் லிங்குசாமி சாரிடம் கதை சொல்லி அவருக்கு திருப்தியாகி இந்த படம் பண்ணியிருக்கேன் என்றார் சரவணன். (அந்த ஹீரோ யாரென்று நமக்கு தெரியும். எனக்கும் தெரியும் என்று கூறும் வாசகர்கள் ‘கடிதம்’ பகுதியில் குறிப்பிட்டால் உங்கள் நுண்ணறிவுக்கு 100 மார்க்)

விக்ரம் பிரபுவின் மூக்கு இருக்கிறதே, அது வெள்ளை தாளில் புள்ளி வைத்த மாதிரி சரக்கென கவனிக்க வைக்கும் ரகம். இதை ஒரு கேள்வியாக்கி விக்ரமுக்கு மூக்கின் மீது கோபம் வராத மாதிரி நாசுக்காக கேட்டார் நிருபர் ஒருவர். ‘ஆக்ஷன் காட்சிகளுக்கு உங்களின் இந்த விடைத்த மூக்கு ஓ.கே. முத்த காட்சிக்கு இடைஞ்சலா இருந்திருக்குமே? ’

என்ன சார்… இப்படியெல்லாம் கேட்கிறீங்க? நீங்க சொன்ன பிறகுதான் நான் அதுபற்றி யோசிக்கவே ஆரம்பிச்சுருக்கேன் என்றார் விக்ரம் பிரபு (வேறு வழியில்லாமல்)

சரி, அதெல்லாம் இருக்கட்டும். படத்தின் ஹீரோயின் சுரபி எப்படி? டெல்லி பெண். தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தினந்தோறும் கட்டாயமாக தமிழில் பேசுவாராம். அது மற்றவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ? அவர் சீக்கிரமாகவே தமிழ் கற்றுக் கொண்டார். இந்த படத்தில் க்ளைமாக்சில் ஒரு ஆணுக்கு நிகராக அவர் செய்திருக்கும் விஷயம் ஒன்று உங்களை அசர வைக்கும் என்றார் யூடிவி தனஞ்செயன்.

எல்லா புதிரையும் விட பெரிய புதிரா இருக்கும் போலிருக்கே?

Ivan Vera Madhiri team meets the press

Ivan Vera Madhiri team including the co producer UTV’s Dhananjayan, director Saravanan, Vikram Prabhu and other cast and crew met the press today. 2 song sequences and the trailer was shown to the press. The trailer was very crisp and it has enough indication that Ivan Vera Madhiri will be a film with a difference.

The film is director Saravanan’s next after his debut film Engeyum Eppodhum. Speaking about the film he clarified that his film is not based on law college clash. “My hero is not a submissive person but dares to question if something wrong is happening in his presence” said Saravanan. He also pointed out that it took 2 years to release his 2nd film, because another hero who listened the story and accepted to do it, walked out of the project citing that the story was not convincing. Subsequently Vikram was signed in to complete the film, he revealed.

Surabhi, Delhi girl, the lead lady of the film has insisted on learning Tamil and was trying to speak in Tamil in the sets added Dhnanjayan, UTV Motion Pictures’ representative. He also revealed that everyone will be surprised to see Surbhi’s performance in the climax.

2 Comments
  1. ramesh says

    its arya

  2. sekar says

    Saravanan waited for actor arya for this script.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மோடியை சந்தித்தாரா வடிவேலு?

கோடம்பாக்கத்தை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையே அதிரடிக்கிற செய்திதான் இது. பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி பெங்களூருக்கு வந்தாரல்லவா? அப்போது ரகசியமாக அவரை சந்தித்தாராம் வைகைப்புயல் வடிவேலு....

Close