முன்னாள் மாமனாரிடம் கறார்…. நடுங்க வைத்த நயன்தாரா!

நயன்தாராவின் சம்பாத்தியத்தையெல்லாம் ஏதாவது ஒரு சீசன் புயல் வந்து கபளீகரம் செய்துவிட்டு போகும். இந்த கொடுமை காதல் என்ற பெயரில் நடந்து வருவதுதான் இன்னும் பெரிய கொடுமை. புயலுக்கு பின்னே அமைதி என்பது போல சில மாதங்கள் மவுன விரதங்கள் மேற்கொள்ளும் நயன்தாரா, அதற்கப்புறம் ஒன்ணுலயிருந்து எண்ண ஆரம்பித்து மறுபடியும் கோடிகளை சேர்ப்பார். இப்போதெல்லாம் பண விஷயத்தில் ரொம்ப கறாராக இருக்கும் நயன்தாரா, சிம்புவுடன் இணைந்து நடிக்க போட்ட நிபந்தனைகள் என்னென்ன என்பதை பிரபல நாளிதழ் ஒன்று புட்டு புட்டு வைக்க, திரையுலகமே ஒரே அமளி துமளி.

ஆனால் இன்னொரு புதிய தகவல் இப்போது கசிந்திருக்கிறது. சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவிடம் சம்பள பேச்சு வார்த்தைகளை நடத்தியது யார் தெரியுமா? காதல் திருவள்ளுவர் டி.ராஜேந்தர்தான். நயன்தாரா இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோது தனது புன் சிரிப்புக்கு ஸ்பெஷல் டிடர்ஜென்ட் போட்டுக் கொண்ட பாண்டிராஜ், அவர் தனக்கான சம்பளத்தை கேட்டபோது, படீரென ப்யூஸ் போனார். இரண்டு கோடிக்கும் குறைவாக கொடுத்தால் ஐ யம் ஸாரி என்று கூறிவிட்டாராம் அப்போதே. சம்பளத்தை சிம்புவோட அப்பாதான் பேசுவாங்க. நான் பேச சொல்றேன் என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்ட பாண்டிராஜ், வெயிட்டை எடுத்து டி.ஆர் தலையில் வைக்க, அவரும் சிரித்துக் கொண்டே நான் பார்த்துக்குறேன் விடுங்க என்று கூறியிருந்தாராம். அது எந்த நம்பிக்கையில்?

ஒரு காலத்தில் தன் வீட்டுக்கே வந்து தன் காலில் விழுந்து ஆசி பெற்றவர்தானே என்ற நம்பிக்கையில். அந்த மரியாதை அப்படியே இருக்கும் இருக்கும் அவர் நம்ப, அதுக்கு நீங்க வேற ஆள பாருங்க என்பது போல நடந்து கொண்டாராம் இந்த முன்னாள் மருமகள். சம்பளம் இரண்டு கோடி வேணும். எனக்கு இதுக்கு முன்னாடி உங்க பையனோட ஏற்பட்ட கசப்பான எக்ஸ்பீரியன்ஸ் திரும்பவும் வரக் கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டவர், ஒண்ணும் அவசரம் இல்ல. யோசிச்சு முடிவு சொல்லுங்க என்று போனை கட் பண்ணிவிட்டாராம். டிசம்பரில்தான் கால்ஷீட் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா. இந்த இரண்டு கோடிக்கு ஒப்புக் கொண்டாலொழிய அவர் படப்பிடிப்புக்கு வர மாட்டார் என்பதை மிக சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் அத்தனை பேரும்.

ஹ்ம்ம்ம்… moneyயான பொண்ணு!

Nayanthara learns to play smart

There was a time Nayanthara’s money earned would be swept away in the blind love, making her life miserable. However she is now learning her lessons in a hard way, so it appears.

Pandiaraj and Simbu who went to meet Nayanthara for finalising her casting in their film, were dismayed at Nayan’s demand of Rs.2 crores as her salary. Director Pandiaraj excused himself and told her that it would T Rajender who finalises the salary, and will speak to her. When T Rajender contacted her over phone, Nayan was firm saying that she needs Rs.2 crores as salary and that her past bitter experience with Simbu should not be allowed to happen again. Nayan, really learns to live her life, now!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்னது… இரண்டாம் உலகம் தோல்விப்படமா? ஆர்யாவின் அடுத்தபட இயக்குனர் அதிர்ச்சி!

தமிழ்சினிமாவுக்கு தமிழில் பெயர் வைப்பதையே பெரிய விஷயமாக பேசும்படி ஆகிக் கொண்டிருக்கிறது செம்மொழியான தமிழ் மொழியாம் நிலைமை. இருந்தாலும் பாராட்டியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு வடிகட்டிய...

Close