முன்னே வி.டி.வி கணேஷ், இப்போ சந்தானம்… – ஏமாறுகிறாரா சிம்பு?
சிம்பு கட்டியிருக்கிற வீட்டுக்கு அவரே ‘கெஸ்ட் ஹவுஸ்’னு பேர் வச்சாலும் ஆச்சர்யமில்ல. ஏனென்றால் மெயின் ஹீரோவான அவரை தாஜா பண்ணி தாஜா பண்ணி கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கே. ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் வி.டி.வி கணேஷ், படத்தில் எதை நம்புகிறாரோ இல்லையோ? பிசினசுக்கு சிம்புவை நம்புகிறார். அதனால் சிம்புவின் கால்ஷீட்டை பதினைந்து நாட்களுக்கு வாங்கி, (அவர் அதையே பிய்த்து பிய்த்து கொடுப்பதால் சமயத்தில் வீங்கி…) அவருக்கு ஜோடியாக ஆன்ட்ரியாவையும் நடிக்க வைத்து பிராஜக்ட்டை big ஆக்கிவிட்டார்.
இப்பவே படத்தை மொத்தமாக வாங்க க்யூவில் நிற்கிறார்களாம். இந்த விஷயத்தில் கணேஷைவிட சந்தானத்திற்கு அதிக உரிமையிருக்கிறதல்லவா? அவரும் தானே ஒரு படத்தை தயாரித்து அதில் ஹீரேவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்திற்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்று பெயர்.
இந்த படத்தில் சிம்புவை கெஸ்ட் ரோல் பண்ண அழைத்தாராம். அதென்னவோ தெரியவில்லை. ஊருக்கே கடுப்பு ராசாவாக தோற்றமளிக்கும் சிம்பு, இவ்விருவரிடமும் உருகி வழிகிறார். நட்பை பெரிதாக மதிக்கிறார். இந்த படத்திலும் சந்தானம் கேட்கிறளவுக்கு தேதிகளை வாரி வழங்கியிருக்கிறாராம்.
இவர் மெயின் ஹீரோவாக நடிக்கும் வாலு, வேட்டை மன்னன் படங்கள் நகர முடியாமல் நிற்கிற நேரத்தில், சிம்புவின் இந்த துண்டு துக்கடா பர்பாமென்ஸ் பார்த்து வயிறெரிந்து போயிருக்கிறார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.
Simbu allots dates for VTV Ganesh and Santhanam
It appears that VTV Ganesh has enlarged his film Inga Enna Solludhu, by making a cameo appearance of Simbu, as major one in the film. Thus he has ensured that his film does good business, as distributors are now seem to be ready to buy the film. Why not? Ganesh not only made the Simbu’s role as important one, he has also inducted Andrea to pair Simbu.
Santhanam, who is producing his next film Vallavanukku Pullum Ayudham has also requested Simbu for a cameo appearance in his film, and Simbu has obliged his friend, with sufficient dates.
While industry circle say Simbu is a tough nut, it is puzzling how Ganesh and Santhanam are able to get what they need, or conversely how and why Simbu is spontaneous in helping them.
Whatever be the reasons behind it, one person who will be certainly not happy with it, is Nic Arts Chakravarthy, as his films Vaalu and Vettai Mannan are limping yet.