மும்பையில் தண்ணீரை விற்பனை செய்யும் ஏ.டி.எம் அறிமுகம்

0
மும்பை மாநகரத்தின் கிழக்கே புறநகர் பகுதியில் உள்ள மான்குர்ட் பகுதியில் தண்ணீரை பட்டுவாடா செய்யும் ஏ.டி.எம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் வரை பட்டுவாடா செய்யும் இந்த இயந்திரத்திற்கு “அக்வா டி.எம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்கிகளை போலவே ப்ரீபெய்டு கார்டுகளின் மூலம் இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வந்தனா அறக்கட்டளை மற்றும் அக்வாகிராஃப்ட் குழுமம் இணைந்து நிறுவியுள்ள இந்த ஏ.டி.எம்-ன் மூலம் விற்கப்படும்
சுத்தமான குடிதண்ணீரின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மான்குர்ட் நகர்பகுதியில் சுத்தமான தண்ணீர் கிடைப்பது என்பது மிகவும் சிரமமாகும். இந்நிலையில் அங்கு இதுபோன்ற இயந்திரம் அமைக்கப்பட்டிருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபோன்ற ஒரு ஏ.டி.எம் மும்பையில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Leave A Reply

Your email address will not be published.