முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதில், ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை குறைப்பு பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், வேலூர் சிறையில் இருந்த நளினியும் விடுவிக்கப்படுவார்.

நளினியுடன், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயாஸ் போன்றோரும் விடுதலை செய்யப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் அந்த 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்னை கமல் கவனிக்கிறார் – சூர்யா

ஆனந்த விகடனில் ‘வட்டியும் முதலும்’ என்ற தொடரை எழுதி, தமிழ் படிக்கும் எல்லா நெஞ்சங்களிலும் நிறைந்தவர் ராஜு முருகன். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பல...

Close