மு.க.ஸ்டாலின் மீது மேயர் சைதை துரைசாமி ஊழல் குற்றச்சாட்டு

மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தபோது ரூ. 417 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினர். கேள்வி நேரம் முடிந்த பிறகு அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சாலைகள் அமைத்ததில் முன்னாள் மேயர்களான ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் இருந்த காலத்தில் ரூ.417 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன், சைதாப்பேட்டையில், கெங்கை அம்மன் கோவில் தெருவில் சாலை போடாமலே போட்டதாக தவறான கணக்கு எழுதி இருக்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. துரைசாமியின் குற்றச்சாட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சிகளை கைத்தொலைபேசியில் வைத்திருந்த இளைஞன் கைது!

மட்டக்களப்பு, கல்குடாப் பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து...

Close