மூலக்கொத்தளத்தை மறக்க மாட்டேன்… உலகம் சுற்றும் சிவமணியின் உள்ளூர் பாசம்!

ட்ரம்ஸ் சிவமணி… உலகமே வியக்கக் கூடிய இந்த ட்ரம்ஸ் கலைஞருக்கு நம்ம வட சென்னையிலிருக்கும் மூலக் கொத்தளம்தான் ஆரம்பகால திண்ணை. இந்தி படவுலகம் கூட இவரை ‘வாங்க மியூசிக் டைரக்டர் ஆகலாம்’ என்று அழைத்தும், அதற்கான காலம் கனியணும் என்று காத்திருந்தாராம். இதோ, அந்த நல்லகாலம் வந்தேவிட்டது. கலைப்புலி தாணு தயாரிக்கும் ‘அரிமா நம்பி’ படத்திற்கு சிவமணிதான் இசை. இந்த படத்திற்கான அறிமுக விழாவில் சிவமணி பேசிய பேச்சு, நான்தான் கொம்பு என்பவர்களையெல்லாம் கொஞ்சம் தட்டி வைத்திருக்கும். அவ்வளவு எளிமையான பேச்சு. உண்மையான பேச்சு.

கே.வி.மகாதேவன் சார், இளையராஜா சார், எம்.எஸ்.வி அண்ணா எல்லாரையும் பக்கத்துல இருந்து பார்க்குற பாக்யம் கிடைச்சவன் நான். எங்க அப்பா கே.வி.மகாதேவனிடம் வொர்க் பண்ணும்போது நான்தான் அவருக்கு சாப்பாடு கொண்டு போவேன். அப்பவே எனக்கு இசை மேல ஆசை வந்திருச்சு. இளையராஜா சார், மற்றும எம்.எஸ்.வி. அண்ணாவோட ஆர்மோனிய பொட்டியை நான்தான் சுமந்துட்டு போய் வைப்பேன். அவங்களோட ஆசிர்வாதம் எனக்கு கிடைக்காதாங்கிற ஏக்கம்தான் காரணம்.

ஏ.ஆர்.ரஹ்மான் சார் நியூயார்க்குல ஒரு கீ போர்டு வாங்குனார். நானும் இருந்தேன். சென்னைக்கு வந்து ஆன் பண்ணி பார்த்தால் அது ஆன் ஆகவே இல்லை. ஏகப்பட்ட லட்சங்கள் கொடுத்து வாங்கியது. அதுமட்டுமல்ல, ரொம்ப ஆசையா அதை வாங்கினார். கவலைப்படாதீங்க. நான் உடனே நியூயார்க் போய் அதை மாத்திட்டு வர்றேன்னு கிளம்பி போய் மாத்திட்டு வந்து கொடுத்தேன். இதெல்லாம்தான் எனக்கு கிடைச்ச ஆசிர்வாதம் என்றார் சிவமணி.

சிவமணி எப்படி மியூசிக் பண்ணியிருப்பாரோன்னு சிலர் நினைச்சிருக்கலாம். இந்த படத்தில் நான் எல்லா பாடல்களையும் மெலடியாகதான் போட்டிருக்கேன். இந்த படத்திற்கு இசையமைச்ச அனுபவத்தை நான் ஆடியோ ரிலீஸ்ல சொல்றேன் என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டு இறங்கினார். போகும்போது அவர் சொன்ன இன்னொரு விஷயம், உயரத்தில் ஏறியவர்களுக்கான ட்யூஷன். நான் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் போய் ட்ரம்ஸ் வாசிச்சிருக்கேன். ஆனால் என்னுடைய ஆரம்பகால இசைக்கு அடித்தளமாக இருந்த இந்த மூலக்கொத்தளத்தை மறக்கவே மாட்டேன் என்றார்.

அவரது முதல் சாய்ஸ் தமிழ் படமாக இருந்ததே… அதற்காகவே ஒரு அப்ளாஸ்…!

I will never forget the foundation I had here – Drums Sivamani

Drums Sivamani, the music composer for Arima Nambi, is to be heard to believe. The speech was straight from his heart and so it was very emotional one. Despite calls from several film makers from Bollywood, to score music for their film, he waited for the right time and opportunity, he claimed. When the producer Kalipuli Thanu called him to include him for music composition, he agreed to open his innings.

He said that he was fortunate to see late KV Mahadevan, Ilayaraja sir and elder borther MSV, and it was because of all their blessings and good wishes music has gone into his blood. He also said that he is very close to AR Rahman sir too, which is the good things happened in his life.

“I have composed all songs with melody with rhythm, in the film. I will share the experience of composing in the film during the audio launch,” he noted. Finally he said that Chennai laid the foundation for his music journey and I will never forget it in my lifetime, which received thunderous applause from all the guests and audience.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இருபத்தைஞ்சு வயசை தாண்டிய எல்லா டைரக்டரும் சினிமாவை விட்டு ஓடுங்க… -யூத்துகளின் அட்டகாசம்!

slide இதற்கு முன்பு இப்படியொரு பிரஸ்மீட் நடந்திருக்குமா தெரியாது. உ - படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய இயக்குனர் ஆஷிக்கும் சரி, படத்தை வாங்கி வெளியிட இருக்கும் இ...

Close