மூளை மாற்றுகிற படமா? மூளை மாற்றுப் படமா?

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரித்திருக்கும் படம் “ஆய்வுக்கூடம்”. இதில் நடிகர் பாண்டியராஜன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் ஆராய்ச்சியாளராக நடித்துள்ள பாண்டியராஜன் மனநோயாளி ஒருவரின் மூளையை பைட்டருக்கும், பைட்டரின் மூளையை மனநோயாளிக்கும் மாற்றுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் காமடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன்.

படத்தின் கதை பற்றி கேள்விப்பட்டு படத்தை பார்த்த தயாரிப்பாளர் அறிவழகன், படத்தை வாங்கி தனது PKA பிலிம்ஸ் சார்பில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க சிங்கப்பூர்,மலேசியா, துபாய், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார்.

படத்தில் புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் ப்ரீத்தி,சொந்தர்,பிரபுராஜ்,ரியாஸ்,பவுனிஜெய்சன், நெல்லைசிவா,செம்புலி ஜெகன்,ராஜராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு எஸ்.மோகன் (இவர் ஒளிப்பதிவாளர் வி.செல்வாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

அனந்தபுரத்து வீடு படத்திற்கு இசையமைத்த ரமேஷ்கிருஷ்ணா இசையமைக்கிறார்.

பாடல்கள் டாக்டர்.கிருதயா, துரைமுருகன், சன்ராஜா.

ஸ்டன்ட் சூப்பர்குட் ஜீவா

தயாரிப்பு மேற்பார்வை ஆத்தூர் ஆறுமுகம்

தயாரிப்பு கணபதி

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் அன்பரசன்.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் U “ சான்றிதழ் கொடுத்து பாராட்டி உள்ளனர்.

Read previous post:
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்   படத்திற்கு பணிபுரியும் பிரபல ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர்

  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்  தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார். மிகுந்த...

Close