மேனேஜர்கள் நீக்கம்…. அதர்வாவின் அதிரடிக்கு லவ்தான் காரணமா?

பழைய கழிதலும் புதியன புகுதலும் என்கிற சித்தாந்தம் எப்பவும் மாறப்போவதேயில்லை. அதர்வா செய்தது சரியா, தவறா என்பது பற்றியும் இப்போது பேச்சில்லை. ஏனென்றால் தனக்கு கேரியர் முக்கியம் என்று நினைக்கிறார் அவர். அதற்கு உதாரணம்தான் இது. அப்பா காலத்திலிருந்தே அவருக்கும் தனக்கும் மேனேஜராக இருந்த சம்பத் என்பவரை நீக்கிவிட்டார் அதர்வா. அவருடன் பணியாற்றி வந்த வெங்கட் என்பவருக்கும் கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தன்னுடனேயே இருக்கிற மேனேஜர்களை ஒரு ஹீரோ நீக்குகிறார் என்றால், ஒன்று அவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. இன்னொன்று ரகசியங்களை வீட்டுக்கு போட்டுக் கொடுப்பது. அதர்வாவுக்கும் ப்ரியா ஆனந்துக்கும் காதல் என்று செய்திகள் வருகிற நிலையில், இவ்விரு மேனேஜர்களும் நீக்கப்பட்டதற்கு காரணம் என்னவென்று புரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

அதே நேரத்தில் தற்போது அதர்வாவை தத்தெடுத்திருக்கும் மேனேஜர் சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மேனேஜராக இருந்தவர். அவர் வந்த ராசியும், அவரது கணக்கு வழக்கு கூட்டல் கழித்தல்களும் தன்னையும் அந்த லெவலுக்கு கொண்டுபோகும் என்று நம்புகிறாராம் அதர்வா. அதற்கு முன்னோட்டமாக புது மேனேஜர் போட்டிக்கும் கண்டிஷன் சற்றே நம்பிக்கை அளிக்கிறது.

அப்படியென்ன கண்டிஷன்? சம்பளம் இவ்ளோ கொடுங்க என்று கேட்கவே கூடாது. அசத்தல் ஹிட் கொடுக்கிற வரைக்கும் தயாரிப்பாளர் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் அது. இதற்கு சம்மதித்திருக்கும் அதர்வா, வெற்றியை நோக்கி நடைபோட ஆரம்பித்திருக்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும். ஆல் த சேட் ஓல்டு மேனேஜர்ஸ்… ஆல் த பெஸ்ட் புது மேனேஜர்…

Atharva removes his Managers

Atharva the upcoming actor in Kollywood has cleaned up his establishments, so it seems. He has removed the Manager Sampath, who has been working since the time of late Murali, Atharva’s father. He has also removed Venkat Asst. Manager, to get a vibrant look for his office.

If a hero in Kollywood removes his Manager means it may be either the secrecy is not maintained by them, or Managers might have involved in unethical practices. However from the point of view of appointing new Manager, gives an indication that Atharva is more inclined to refurbish his office environments for developing his career.

The chosen new Manager is one who earlier worked with Suriya and Dhanush. Atharva believes that the new Manager’s working might help his career graph go upwards. Incidentally the new appointee has put in a condition to Atharva that he should not demand salary from producer and he should accept the salary whatever the producer gives, till such time he gives at least couple of hits. Atharva seems to have agreed to the conditions with the hope that his future is round the corner!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிஷ்ய இயக்குனரே… இது மட்டும் சரியா?

"நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது...

Close