‘யாராயிருந்தாலும் டோண்ட் டச் ’ எம்.பி யிடம் கடிந்து கொண்ட நடிகை

‘யாராயிருந்தாலும் டோண்ட் டச் ’ என்று ஆவேசமாக கூறிய ஒரு நடிகையை பற்றிதான் கேரளாவிலும் டெல்லியிலும் ஒரே மூச்சு பேச்சு. நடிகை கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கேரளாவில் இந்த விஷயம் பிரபலம் ஆகலாம். தப்பில்லை. ஆனால் இதில் டெல்லி எங்கே வந்தது? பிரச்சனைக்குரிய விஷயத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே ஒரு காங்கிரஸ் எம்.பி. அதனால்தான் டெல்லியும் அலர்ட் ஆகியிருக்கிறது.

கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பியான பீதாம்பர குரூப்பு ஒரு படகு போட்டியை துவங்கி வைக்க வந்தாராம். அதே விழாவுக்கு நடிகை ஸ்வேதா மேனனும் வந்தாராம். வந்த இடத்தில் குரூப்பு தனது தவிப்பை தாறுமாறாக காட்டிவிட்டார் போலிருக்கிறது. (அவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலும் எம்.பி. எப்படி தனது காதல் கணையை வேகமாக பாய்ச்சினாரோ, அவருக்கே வெளிச்சம்.) ஆனால் இந்த விஷயத்தை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுவது போல விழாவில் தன்னை இச்சையுடன் அப்ரோச் செய்தவர் பற்றி கடுப்பான ஒரு பேட்டியை அளித்துவிட்டார் ஸ்வேதா. இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட எம்.பி யின் பெயரை சொல்லாமலேயே.

ஒரு பிரச்சனை வந்தால் போதும். அதை லபக்கென்று பிடித்துக் கொண்டு அதை வைத்துக் கொண்டே மூன்று வேளையும் பிசியாகிவிடுகிற பெண்கள் அமைப்பு ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக கொடி பிடிக்க -ஆரம்பித்துவிட்டது.

இவரும் அம்மா என்கிற சினிமா அமைப்பிலும், கேரளாவின் நடிகர் சங்கத்திலும் புகார் செய்யப் போகிறாராம். கவர்ச்சி நடிகை என்று நினைத்து கைகளையும் கண்களையும் அலைபாய விட்ட எம்.பி.யோ, ”ஸ்வேதாவா… அப்படின்னா யாரு? அவங்களை நான் முன்ன பின்ன பார்த்ததேயில்லையே” என்கிற ரேஞ்சுக்கு பதிலளித்து வருகிறார்.

‘முன்ன பின்ன’ பார்க்க ஆசைப்பட்டுதானே இப்படி சந்தியில வந்து நிக்குது மானம். உங்களுக்கெல்லாம் நல்லா வேணும்….

Shweta Menon does a ‘U’ turn on her complaint

Actress Shweta Menon has been in the news for the last couple of days. The actress recently filed a complaint against Kollam MP Peethambara Kurup for allegedly molesting her in public during a boat race. She has charged that the MP had made sexual advances towards her. The women rights group immediately raised their voice in support of the actress. But Shweta did a ‘U’ turn now. Now we hear that the actress has withdrawn the complaint against the MP. She was reportedly quoted that she was under no pressure to withdraw the complaint.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை -3 – முருகன் மந்திரம்

ஒருநாள் எங்கயோ போயிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்துட்டிருந்தோம். கூட என் இல்லத்தரசி, மகள், மடியில மகன்… ஏதோ நெனைப்பில சைடுல உட்கார்ந்து முகத்துல காத்து பட்ட...

Close