யாருகிட்ட வந்து என்ன பேசுறீங்க? விஜய் கொக்கரிப்பு!

பொதுவாகவே ஒரு படத்தை ரிலீஸ் செய்கிற நேரத்தில் அதுவரைக்கும் சந்து பொந்துகளில் கிடக்கும் பிரச்சனைகள் எல்லாம் தலை உயர்த்தும். பாய்ந்து குதறும். அஞ்சி ஓடுகிறவர்களை துரத்தி துரத்தி ரத்தம் குடிக்கும். தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும் இத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த மிரட்டலின் காரணமாக சொந்த சம்பளத்தை இழப்பவர்களும், ஏனென்றே தெரியாமல் அடுத்த படத்திற்கு இலவச கால்ஷீட் கொடுப்பவர்களும் இங்கே நிறைய உண்டு.

எப்படியாவது நம்ம படம் ரிலீஸ் ஆகிட்டா போதும் என்கிற பரிதாப மனநிலைதான் அது. இதோ… ஜில்லாவுக்கும் அப்படியொரு கட்டையோடு குறுக்கே வந்திருக்கிறார்கள் சிலர். கணக்கை கொண்டு வாங்க. முறையா இருந்தா உங்க பணத்தை தர்றேன் என்று கூறியிருக்கிறார் விஜய்யும்.

அப்படி என்னதான் நடந்தது? தலைவா பட நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமா ரிலீஸ் தள்ளிப் போனதல்லவா? அதே மாதிரி பல ஊர்களிலும் பிரச்சனை. இதையெல்லாம் ஜில்லா ரிலீஸ் நேரத்தில் கொண்டு வந்த தலைவா பட தயாரிப்பாளர் தரப்பு, நஷ்டத்தை சரி பண்ணி கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்றார்களாம். அவர்களிடம் பேசிய விஜய் சாட்டிலைட் 15 கோடி, ஆந்திரா கேரளா உரிமை 5 கோடி, தமிழக உரிமை 13 கோடி, ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமைன்னு நல்லாதானே வசூல் பண்ணியிருக்கீங்க, அப்புறம் என்ன என்றாராம் விஜய்.

கணக்கோடு வர்றேன் என்றவர்கள் ஓட்டம் பிடித்ததாக தகவல்.

Vijay dares the trouble makers

Whenever a popular film is getting released it is very usual in Kollywood that people wait for the occasion to put hurdles for a problematic release for the film. This happens mainly to popular heroes. Vijay is one who already faced such situations with Thalaivaa.

This time too it is learnt that he faced with similar situation but within the industry. Thalaivaa makers seem to have approached Vijay to release Jilla after compensating for the loss incurred with Thalaivaa. Vijay has reported to have said the makers of Thalaivaa have recovered handsomely through sale of satellite rights Rs.15 crores, distribution rights for TN Rs.13 cores, distribution rights for Kerala and Andhra Rs.5 crores, and also through audio rights, overseas distribution rights, so on and so forth. He has reportedly told them to bring in the account and if he finds their accusation genuine he would compensate. The makers of Thalaivaa team did not expect such a blunt response from Vijay left the place soon.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அம்மா டி.வி ஆஹா…. கலைஞர் டி.வி யும் ஆஹாஹா…. – இது அஜீத்தின் நழுவல் பாடிலிடிக்ஸ்!

பொதுவாகவே அஜீத் மீது அ.தி.மு.க வை சேர்ந்தவர்களுக்கு ஒரு அன்பு பார்வை உண்டு. பிரபல புலனாய்வு இதழான ஜுனியர் விகடனே ஒருமுறை இவரை அதிமுக அனுதாபி என்று...

Close