யுவன் பாணி தொடர்கிறது…. இஸ்லாமுக்கு மாறவிருக்கும் இளம் ஹீரோக்கள்

உலக தமிழர்களையெல்லாம் பரபரப்புக்குள்ளாக்கிய யுவன், எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை. அண்மையில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் பிரஸ்மீட்டிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே?

அப்படியே இன்னுமொரு காரணமும் இருக்கிறதாம் அதில். அவர் புதிதாக தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் அவர் வெளியில் காட்சியளிக்கும்போது நிறைந்த தாடியுடன் ஒரு முழு இஸ்லாமியராகதான் தோற்றமளிப்பாராம். சரி… இருக்கட்டும். நாம் சொல்ல வருவது இதையெல்லாம் விட முக்கியமான விஷயம். யுவனை தொடர்ந்து தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாமியத்தை தழுவப் போகிறார்களாம். இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்பதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அதில் இரு ஹீரோக்களைப் பற்றி நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும் கிசுகிசுவாக சொல்லிவிடுகிறோம். புரிந்து கொள்வது எளிதுதான். அப்பா பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயம் அடைந்ததால் இன்றைய தேதியில் கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராம். இவருக்கு நம்பிக்கை கொடுத்து நகர்த்தி வருவது யுவன்தான் என்கிறது ரகசியமான தகவல் ஒன்று.

இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறார். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியா சித்தரிந்து வந்தது. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம்.

காலம் இன்னும் எத்தனை மாற்றங்களை சந்திக்க தயாராக இருக்கிறதோ?

Young heroes may follow the footsteps of Yuvan!

Yuvan Shankar Raja who announced his conversion to Islam has shocked the Tamil fraternity around the world. Meanwhile it is heard that some of his friends – of which two young heroes – are also planning to convert into Islam. Both the heroes are Yuvan’s friends. One is popular and bankable hero, whose father is a Muslim and mother a Hindu, and, has been brought up as a Hindu. Yuvan is said to be very close to him and inspires him. The other is a two letter hero who is considered to be a competitor for Simbu but a close buddy of both Simbu and Yuvan. Simbu and his friend have welcome Yuvan’s decision and given their support.

5 Comments
 1. mohamed kasim says

  யார் மாறினாலும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்… இஸ்லாம் என்பதன் பொருள் அமைதி என்பதும் கீழ்படிதல் என்பதும் ஆகும். இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்வதால் இவ்வுலகிலும் அமைதி கிடைக்கும், மறுமையிலும் அமைதி கிட்டும் என்பது இஸ்லாம் முன்வைக்கும் தத்துவம் ஆகும். எனவே இஸ்லாம் என்பது ஒரு சுய சீர்திருத்த இயக்கம். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்பதையும் அவனிடமே நமது மீளுதல் என்பதை அடிப்படையாகக்கொண்டு பொறுப்புணர்வோடு வாழ்வதற்குப் பெயர்தான் இஸ்லாம். இக்கொள்கையை ஒருவர் பின்பற்றி வாழும் வரை தான் அவர் முஸ்லிம் (கீழ்படிபவன்). எப்போது விட்டுவிடுகிறாரோ அப்போது இஸ்லாத்தை விட்டு வெளியேறியும் விடுகிறார். எனவே இஸ்லாத்தை பின்பற்ற விரும்புபவர்கள் சீரியஸாக சிந்தித்துக் கொள்ளட்டும்
  http://quranmalar.blogspot.in/2012/11/blog-post_9814.html

 2. mohamed kasim says

  நபிகள் நாயகம் (ஸல்) மக்களை ஒரு புதிய மதத்திற்கோ அல்லது ஒரு புதிய கடவுளை வழிபடச் சொல்லியோ அழைக்கவில்லை. தான் மக்களுக்குச் செய்த சமூக சேவைகளைக் காட்டி தன்னை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியோ அழைக்கவில்லை. மாறாக அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு சீர்திருத்தத் திட்டத்தின்பால் தான் அழைத்தார்.
  = ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்களே. குலமோ, இனமோ மொழியோ நிறமோ இடமோ உங்களைப் பிரித்துவிடக் கூடாது. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் சுரண்டிக் கொண்டும் மோசடி செய்தும் அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கும் என் சமுதாயமே! வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்! ஒரு இனிய புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்! இந்த குறிக்கோளை அடைய நீங்கள் மறந்துபோன சில உண்மைகளை நினைவூட்டி அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்கவே நான் இறைவனால் அனுப்பப் பட்டுள்ளேன்.
  மறுக்கமுடியாத உண்மைகள்
  = நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய முதல் உண்மை எதுவெனில் இவ்வுலகத்தை படைத்த இறைவன் ஒரே ஒருவனே என்பதும் அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதுதான். அவன்தான் நமக்கு தன் புறத்திலிருந்து எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கி நம்மை பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். அவன் மட்டுமே நம் நன்றிக்கும் வணக்கத்திற்கும் தகுதியானவனும் நம் பிரார்த்தனைகளை ஏற்பவனும் ஆவான். அவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனது படைப்பினங்களே. அவற்றை வணங்குவதும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று அழைப்பதும் எல்லாம் இறைவனை சிறுமைப் படுத்தும் செயலும் வீணும் மோசடியும் ஆகும். எனவே பொய்யான தெய்வங்களை விட்டுவிட்டு உங்களைப் படைத்தவன்பால் வாருங்கள்.
  = அடுத்த உண்மை – இவ்வுலகம் தற்காலிகமான ஒரு பரீட்சைக்கூடம் போன்றது. இதில் நீங்கள் இறைவனின் வழிகாட்டுதல்படி அவன் கூறும் நன்மைகளைச் செய்தும் அவன் கூறும் தீமைகளில் இருந்து விலகியும் வாழ்ந்தீர்களானால் உங்கள் தனி நபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியைக் காண முடியும். அவ்வாறு நீங்கள் படைத்தவனுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தீர்களானால் அதற்குப் பரிசாக அவன் மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்கத்தில் உங்களைப் புகுத்துவான். மாறாக அவனுக்குக் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தீர்களானால் அதற்கு தண்டனையாக மறுமையில் நரகத்தையும் வைத்துள்ளான்.
  = இந்த மறுக்கமுடியாத சத்தியங்களை ஏற்றுக் கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவன் நமக்காக வகுத்துத் தந்துள்ள அழகிய வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். பூமியை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம் வாருங்கள்.
  எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தத் திட்டத்தின் பால்தான் நபிகள் நாயகம் (ஸல்) மக்களை அழைத்தார்கள்.
  ஆனால் என்ன நடந்தது?
  http://quranmalar.blogspot.in/2014/02/blog-post_11.html

 3. sadiq says

  ஏகத்துவ கொள்கை என்பது ருசியான கொள்கை
  அந்த ருசியை யாரும் அறிந்து கொண்டால் ஒரு நொடிகூட மற்ற கொள்கையில் தொடர முடியாது

 4. mohamed kasim says

  http://islamindia.wordpress.com/ இணைய தளத்தில் நான் கண்ட ஒரு விவாதம் …

  நஞ்சுண்டமூர்த்தி சொல்வதென்னவென்றால்:
  2:32 முப இல் பிப்ரவரி 13, 2014
  அண்ணா, உங்களுக்கு மேல நான் அவாள ரொம்ப வெறுத்தேன். கேலி செஞ்சேன். ஒரு தடவை The Message எனும் படத்தை பார்த்தேன். யாரோ பளார்னு கன்னத்தில அறைஞ்ச மாதிரி தோனிச்சு. எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு.

  முஹம்மத்(ஸல்) யார்? . 170 கோடி மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவினரென்பது இப்படத்தை பார்த்தால் புரியும்.

  https://www.youtube.com/watch?v=1jKLF43MR-g

 5. mohamed kasim says

  தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் – அதாவது பிறரை பாதிக்காதவற்றில் – தனி சுதந்திரம் இருப்பது உண்மையே. ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த பாலியல் தொடர்புள்ள செயல்பாடுகளும்!
  உதாரணமாக கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் வழங்கப் பட்டால் குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலையும். கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளை உறவுகள் அர்த்தமற்றவையாகிப் போகும். பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுத்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படும். அங்கு பெண்கள் அநியாயமாக கற்பத்தை சுமந்து கைவிடப் படுவார்கள். சிசுக்கொலைகள், அனாதைகள், தந்தைகள் இல்லாப் பிள்ளைகள், பொறுப்புணர்வு இல்லா பெற்றோர்கள் போன்றோர் அதிகரிக்க அதிகரிக்க சுயநலமும் கொலையும் கொள்ளையும் மலிந்து அறவே ஒழுக்கமில்லாத சமூக சூழல் அமையும்.
  எனவே நாம் வாழும் சமூகத்தில் அமைதி வேண்டும் என்று விரும்புவோமேயானால் அங்கு பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. நமது குடும்பங்களில் அல்லது சமூகத்தில் தீய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தெளிவான விதிமுறைகளும் தேவைப்படுகின்றன, அவை முறையாக பின்பற்றப்படவும் வேண்டும்.
  சரி, இந்த விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது?
  http://quranmalar.blogspot.in/2014/02/blog-post_19.html

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கோலிசோடா உடைப்பது கொண்டாட்டத்தில் முடியும்!

ஒரு படத்தின் நிஜமான சக்சஸ் மீட் வைக்கப்படும் காலம் என்பது அந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தந்தது என்பதை துல்லியமாக கணிக்கிற...

Close